| பெருமான் அழகிய மணவாளப்பெருமான் என்று குறிக்கப்பெறுகின்றார். இந்த மூர்த்தியையும், இராஜேந்திர சோழ அணுக்கப் பல்லவரையர் புதுக்கிப் பிரதிட்டை செய்ததாகத் தெரிகிறது. |
| திருவாவடுதுறை ஆதீன அருளாட்சிக்கு உட்பட்டது. |
| 74. திருவெண்காடு |
| ஆக்கூரிலிருந்து சீகாழி செல்லும் பெருவழியில் பேருந்து மூலம் அல்லிவிளாகத்தில் இறங்கிக் கிழக்கே 4.5.கி.மீ. தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறை, சீகாழி, பூம்புகார் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் செல்லலாம். |
| இது காவிரி வடகரைத் தலங்களுள் பதினொன்றாவது ஆகும். |
| இறைவர் திருப்பெயர் திருவெண்காட்டீசர், சுவேதாரண் யேசர். இறைவி திருப்பெயர் பிரமவித்யாநாயகி. |
| தீர்த்தம் : முக்குளங்கள் - சூரிய தீர்த்தம், அக்கிநி தீர்த்தம் சந்திரதீர்த்தம். |
| இக்குளங்களில் நீராடி வழிபடுகிறவர்கள் பிள்ளைப்பேற்றை அடைவார்கள். அவர்களைத் தீவினைகள் அடையா. இச்செய்திகளை இத்தலத்துக்குரிய, |
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவ ரையுறவேண் டாவொன்றும் வேயன தோளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே | |
| -தி.2ப.48பா.2 |
| என்னும் திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் (பண் - சீகாமரம், பாட்டு.2.)இனிது தெளிவு படுத்தும். |
| இதற்கு திருப்பெண்ணாகடத்தில் அச்சுதகளப்பாளர் என்பார் ஒருவர் புத்திரப்பேறின்றி இருந்தார். அவர் தமது ஆசாரியர் அருணந்தி சிவாசாரியர் அருளியபடி, திருமுறையில் கயிறுசாத்தினர். சாத்திய பொழுது ஞானசம்பந்த சுவாமிகள் திருவாய்மலர்ந்தருளிய |