1073. அரிச்சுற் றவினை யாலடர்ப் புண்டுநீர் எ1ரிச்சுற் றக்கிடந் தாரென்றயலவர் சிரிச்சுற் றுப்பல பேசப்ப டாமுனம் திருச்சிற் றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே. | |
3 |
1074. அல்ல லென்செயும் அருவினை யென்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தா னென்செயும் தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க் கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே. | |
4 |
|
3. பொ-ரை: அரித்தல் மிக்க இருவினையால் தாக்குண்டு எரிசூழ (இடுகாட்டில்) கிடந்தார் என்று அயலோர் சிரிப்புற்றுப் பலபல பேசுதலை அடையுமுன்னரே நீவிர்போய்த் திருச்சிற்றம்பலத்தை அடைந்து உய்மின். |
கு-ரை: அரித்து சிரித்து என்பன முறையே அரிச்சு சிரிச்சு என மருவின. "அரிச்சிராப்பகல்" எனத் தொடங்கும் திருக்குறுந்தொகையிலும் (தி.5.ப.85.பா.3) இவ்வாறு வருதல் காண்க. முதலும் மூன்றுமாம் அடிகளில் உற்ற என்னும் பெயரெச்சமும் உற்று என்னும் வினையெச்சமும் அமைந்தன. இரண்டாமடியில் சுற்ற என்பது வினையெச்சம். |
இப்பாடல், இறக்கும்முன் பிறப்பை நீக்கிக் கொள்ளும் நெறியை உணர்த்துகின்றது. சிற்றம்பலம் அடைவார்க்கு வினையால் அரிப்புண்டலும் இறப்பொடு பிறப்பும் இல்லையாம் என்றபடி. |
4. பொ-ரை: எதிர்வினையும் தீர்தற்கரிய நுகர்வினையும் மேலைவல்வினையாகிய துவந்துவங்களும் எனக்கு என்ன துன்பம் செய்யவல்லன? தில்லைமாநகரிலே திருக்கூத்தாடியருளும் திருச்சிற்றம்பலவனார்க்கு அளவில்லாததொர் அடிமைபூண்ட எனக்கு அவ்வினைகள் ஒரு துன்பமும் செய்யவல்லன அல்ல. |
கு-ரை: அல்லல் - ஆகாமியமாகிய எதிர்வினை. அருவினை - நுகர்ந்தாலன்றித் தீர்த்தற்கரிய |