1075. ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம் நான்நி லாவி யிருப்பனென் னாதனைத் தேன்நி லாவிய சிற்றம் பலவனார் வான்நி லாவி யிருக்கவும் வைப்பரே. | |
5 |
|
பயக்கத்தக்க இருவினை எனப்படும் சஞ்சிதம். துவந்துவம் - இரட்டை. நல்வினை தீவினை, அறம் மறம், இன்பம் துன்பம் என்னும் இரட்டை களையும் அவைபோல்வனவற்றையும் வடமொழியில் துவந்துவம் என்பர். அது தமிழில் தொந்தம் என்று வழங்குகிறது. "என்புள்ளுருக்கி இருவினையை ஈடழித்துத் துன்பங்களைந்து துவந்துவங்கள் தூய்மை செய்து முன்புள்ளவற்றை முழுதழிய உள்புகுந்த அன்பின் குலாத் தில்லை ஆண்டானைக் கொண்டன்றே"(தி.8 குலாப்.3) என்னும் திருவாசகத்தில் துவந்துவங்கள் தூய்மை செய்தல் சஞ்சித வினையையும், இருவினையையும், ஈடழித்தல் ஆகாமியத்தையும், துன்பங்களைதல் பிராரத்தத்தையும் குறித்தல் காண்க. |
'தொண்டன்' என்பது பாடமாயின், வல்வினையாகிய அடிமை எனக்கொள்க. இருவினை இறைவன் ஆணையின் வரும் என்பது சாத்திரம். பரமுத்தியிலும் ஆன்மா முதல்வனுக்கு அடிமையாதலின் 'எல்லையில்லதோர் அடிமை' என்றருளிச் செய்தார். 'மீளா அடிமை' (தி.7.ப.95.பா.1) என்னும் நம்பியாரூரர் வாய்மொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது. |
5. பொ-ரை: உடம்பில் உயிர் உயிர்த்துக்கொண்டிருக்கும் காலமெல்லாம் நான் என்னை ஆளாக உடைய திருச்சிற்றம்பலவனாரை விளக்கமுறப்பெற்றிருப்பேன். இன்பத்தேன் விளங்கிய அத்திருச்சிற்றம்பலவனார் அடியேனைப் பேரின்பவீட்டில் நிலைபெற்றிருக்கவும் வைப்பர். |
கு-ரை: ஊன் - உடல். ஆகுபெயர். நிலாவி - விளங்கி, நிலைபெற்று. உயிர்க்கும் பொழுது - மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும்காலம். நாதன் - உடையான். தேன் - சிவானந்தம். வான் - விண்ணுலகு அன்று; சிவலோகம். ஊனில் ஆவி என்றும், ஊன் நிலாவி என்றும் பிரித்துரைக்கலாம். வானிலாவி என்புழியும் அவ்வாறே கொள்ளலாம். முதல்வன் திருவருளை மறவாதவர்க்கே பேரின்பம் எய்தும் என்பது கருத்து. |