பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)51.திருப்பாலைத்துறை561

1588.
வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்
அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்
செங்கண் மாலயன் தேடற் கரியவர்
பைங்க ணேற்றினர் பாலைத் துறையரே.
10
1589,
உரத்தி னாலரக் கன்னுயர் மாமலை
நெருக்கி னானை நெரித்தவன் பாடலும்
இரக்க மாஆருள் செய்தபா லைத்துறை
கரத்தி னால்தொழு வார்வினை யோயுமே.
11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: மேகலை-பெண்கள் இடையில் அணியும் அணிகலன். மேகலை கூறியது மாதொரு வறராதல் பற்றி.
     10, பொ-ரை: திருப்பாலைத்துறையர், வெவ்விய கண்ணை உடைய வாளரவை ஆட்டி அச்சுறுத்துவர்; அடியார்க்கு அருள் வழங்குபவர்:செங்கண்ணை உடையமாலும் அயனும் தேடற்கு அரியவர்; பைங்கண்ணை உடைய இடபத்தை வாகனமாக உடையவர்.
     கு-ரை: வெங்கண்-கொடிய கண், வாள் அரவு-ஒளி பொருந்திய பாம்பு ஆட்டி - ஆடச்செய்து. வெருட்டுவர்-தோற்றத்தால் அச்சம் விளைவிப்பவர். அங்கணார்-அழகிய கருணை பொருந்திய கண்களை உடையவர்.
     11,பொ-ரை: தன் ஆற்றலினால் இராவணன் உயர்ந்த திருக்கயிலாய மாமலையை நெருக்கலுற்றானை நெரித்து,அவன் பாடலும் கேட்டு இரக்கமாக அருள்புரிந்த திருப்பாலைத்துறையைக் கரங்களால் தொழுவார் வினை நீங்கும்.
     கு-ரை: உரத்தினால்-வலிமையினால். உயர்மாமலை-உயர்ந்த கயிலைமாமலையினால். நெருக்கினானை-மலைமகளை அஞ்சச் செய்தவனை நெரித்து-ஊன்றி கரத்தினால் -கைகளால்,