வினைகள். இப்பாடல் தி.5.ப.42.9ஆவது பாடலைப் பெரிதும் ஒத்துள்ளது. 10. பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் மிக்க கொடியவனாகிய இராவணனது தோள்களும், முடிகளும், தாள்களும் தொலையுமாறு திருப்பாதத்து ஒரு விரலைச் சேர்த்தியவர்; உலகிலுள்ளோரெலாம் ஆர்த்துவந்து நீராடிடும் தீர்த்த வடிவினர் ஆவர். கு-ரை: தூர்த்தன் - தீ ஒழுக்கமுடையவன். தொலைய - அழிய. ஒரு விரல் சேர்த்தினார் என்க. உலகத்தார் ஆர்த்து வந்து என்க. ஆர்த்து - ஆரவாரம் செய்து. ஆடிடும் - மூழ்குகின்ற. தீர்த்தர் - தீர்த்தமாயிருப்பவர். தீர்த்தங்களின் வடிவமாயிருப்பவர் எனலுமாம். | திருநாவுக்கரசர் புராணம் எறிபுனல்பொன் மணிசிதறுந் திரைநீர்ப் பொன்னி இடைமருதைச் சென்றெய்தி அன்பி னோடு மறிவிரவு கரத்தாரை வணங்கி வைகி வண்டமிழ்ப்பா மாலை பல மகிழச் சாத்திப் பொறியரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப் போற்றியிருந் தமிழ்மாலை புனைந்து போந்து, செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையா றெய்தித் திருச்சத்தி முற்றத்திற் சென்று சேர்ந்தார். -தி.12.சேக்கிழார். | | |