யாயவர்; தம் திருநாமமாகிய அஞ்செழுத்தை ஓதினால் வந்து அண்ணிக்கின்ற தேனும் ஆவர். கு-ரை: மையறு - குற்றமற்ற. ஞானச்சோதியர் - அறிவாகிய ஒளியை உடையவர். ஆதியர் - தலையானவர். நாமத்தான் ஆன அஞ்செழுத்து - அவரது திருப்பெயரான திருவைந்தெழுத்து. அண்ணிக்கும் - இனிக்கும். தேனர் - தேனாயிருப்பவர். 8. பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் கழல்கொண்ட சேவடியினர்; காலனைக் காய்ந்தருளியவர்; தழல் வண்ணம் கொண்ட செம்மேனியர்; வெண்ணீற்றுப்பொடியணிந்த அழகர்; கல்லால நிழற்கீழ் இருந்து அறம் ஓதிய குழகர் ஆவர். கு-ரை: தழல்கொள்மேனி - தழலின் நிறத்தைக்கொண்ட திருமேனி. சாந்தவெண்ணீறணி அழகர் - சந்தனம்போலத் திரு வெண்ணீற்றை அணிந்த அழகியர். ஆல் நிழற் கீழ் - கல்லால மர நிழலின் கீழ். 9. பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் வட்டமாக வளைந்த மதில் மூன்றுடன் கூடிய வல்லரண்களைச் சுட்டசெய்கையர்; ஆயினும் தம்மை உள்ளத்தே சூழ்ந்தவர்களின் திரண்ட வல்வினைத் துன்பங்களைத் தீர்த்துக் குளிரும்படிசெய்யும் உயர்ந்தோர் ஆவர். கு-ரை: வட்டம் - வட்டவடிவாகிய. மா - சிறந்த. வல்லரண் - வலிய கோட்டை. சுட்ட - அழித்த. குட்டவல்வினை - திரண்ட பழ |