5, பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர், முன்னோர் நாளில் குற்றங்களை உடைய தக்கன் இகழ்வதற்காகக் கொண்ட வேள்வியினைக் கெடும்படியாகச் செய்தவரும், தண்டையாகப் பிரம தேவனின் தலையைக் கொண்ட செண்டு உடையவரும் ஆவர். கு-ரை: பண்டோர் நாள்-முன்பொரு சமயம். இகழ்-இகழ்ந்த. வான்பழி-மிக்கபழி. ஆர்-இழித்தற் பொருளில் வந்தது. கொண்ட-மேற்கொண்ட வேள்விக்குமண்டை-வேள்வியாகிய செருக்கு மிக்க செயல் கெட-அழிய தண்டமா-தண்டனையாக. விதாதா-பிரமன். செண்டர்-செண்டு என்னும் ஆயுதத்தை உடையவர். 6, பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் புதிய பூக்களையணிந்த குழல் உடைய உமாதேவியார் மனம் சுழல, ஒப்பற்றதாய் நினைப்பாரை நடுங்கச்செய்யும் இயல்பினதாய யானையை உரித்த திருக்கையினர்; செம்பொன்னைப் போன்ற கொன்றை மலர்களையணிந்த செஞ் சடையை உடைய நம்பர் ஆவர். கு-ரை: வம்பு - மணம் பொருந்திய. பூங்குழல் - பூக்களோடு கூடிய கூந்தலுடைய. மாது - பார்வதி. மறுக - அஞ்சி மயங்க. கம்பயானை - அசைகின்ற யானையை. கரத்தினர் - கையை உடையவர். செம்பொனார் - சிவந்த பொன்னின் நிறம் பொருந்திய. இதழி - கொன்றை. நம்பர் - விரும்பத்தக்கவர். 7. பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் மானை ஏந்திய கையை உடையவர்; குற்றமற்ற அறிவொளியாயவர்; உலகிற்கெல்லாம் ஆதி |