பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)52.திருநாகேச்சரம்563

1592.
ஓத மார்கட லின்விட முண்டவர்
ஆதி யாரய னோடம ரர்க்கெலாம்
மாதொர் கூறர் மழுவல னேந்திய
நாதர்போல் திரு நாகேச் சரவரே.
3
1593,
சந்தி ரன்னொடு சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி பாடுகள் செய்தபின்
ஐந்த லையர வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி நாகேச் சரவரே.
4

     கு-ரை: நாவலந் தீவு-இமயத்தின் தென்பாலுள்ள இந்த நாட்டிற்கு நாவந்தீவு அல்லது சம்புத்தீவு என்று பெயர். இமய உச்சியிலுள்ள மானசரோவரத்தின் நடுவே உள்ள நாவல் மரத்தை உடைய நாடு. வாழ்பவர்- வாழும் மக்கள். மேவிவந்து-விரும்பி வந்து. வினை பாவம் இவற்றினது கட்டுக்களை அறுவித்துக் கொள்ளும் படி செய்யும் தேவராயிருப்பவர் என்க. பற்றறுவித்தல்-சிறிதும் இல்லாது நீங்கச் செய்தல்.
     3. பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் அலைகள் பொருந்திய கடலின் விடம் உண்டவர்; அயன் தேவர்களாதியாகிய உலகங்களுக்கெல்லாம் ஆதியாயவர்; உடையொரு பாகர்; மழுவினை வலக்கையில் ஏந்திய நாதர் ஆவர்.
கு-ரை: ஒதம்-அலை ஆர்-பொருந்திய; அயனோடு அமரர்க்கெல்லாம் ஆதியார் என்க. ஆதியார்-முதலானவர். அயன்-பிரமன். வலன்-வலது திருக்கரம். போல் -அசை.
     4, பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் சந்திரனோடு சூரியனும் வந்து சீர்வழிபாடுகள் செய்தபின் ஐந்துதலை உடைய அரவின் பணியையும் கொண்டருளும் மைந்தர்(பெருவீரர்)ஆவர்.
     கு-ரை: தாம்-சந்திர சூரியர்கள். உடன்வந்து-உடனாய் சேரவந்து. சீர்வழிபாடுகள்-சிறப்பு வழிபாடுகள். செய்தபின்-வழிபாடுகள் செய்தபின்னர். ஐந்தலை அரவு -ஐந்து தலைகளோடு கூடிய நாகம். பணி-பணிவிடை. சந்திரன், சூரியன், ஐந்தலை நாகம் பூசித்த தலம் என்ற தலவரலாற்றுக் குறப்பு அமைந்துள்ளது. அருள்-அருள்செய்த. மைந்தர்-வலியர்.