பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு57

என்னும் விளக்கம் இன்றியமையாத தொன்றாகும்.

"குறிக ளும் அடையாளமுங் கோயிலும்
நெறிக ளும் அவர்நின்றதோர் நேர்மையும்"

என்பதில் (தி.5,ப,90, பா,6) குறிகள்- கடவுளின் திருவுருவங்கள். அடையாளம்- விடை, கொடி முதலிய சின்னங்கள். நெறிகள்- சமய நெறிகள் அல்லது சரியை கிரியை யோக ஞான நெறிகள். அவர் நின்றதோர் நேர்மை-அப்பெருமான் இவற்றை நாம் உய்யும் நெறிகளாகக் காட்டி நின்றதொரு நடுவுநிலை. 'நேர்மை நுண்மை எனலுமாம்' என்பது உண்மை விளக்கமாய் விளங்குகின்றது.

"புழுவுக் கும்குணம் நான்கு எனக் கும்அதே
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை"

என்பதில் புழுவுக்கு உள்ள குணம் நான்கு எவை? என்பதற்கு, (தி.5.ப.91.பா.4) 'உணவின் பொருட்டு முயலல், உண்டல், உறங்கல் இன்ப துன்ப நுகர்ச்சி' என்ற விளக்கம் மிகப் பொருந்துவதேயாம்.
     "விறகிற்றீயினன்" என்னும் திருப்பாடலில் "உறவுகோல்நட்டு உணர்வு கயிற்றினால்- முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே" என்பதில் 'உறவு -அறிவு உணர்வு-அன்பு' என்னும் விளக்கம் சிறந்ததொரு விளக்கமாகும்.(தி.5.ப.90.பா.10) "நரிவிருத்தம தாகுவர் நாடரே" என்பதற்கு, 'நரியின் வரலாறு' எனப் பொருள் கூறி நகை விளைக்கும் அக்கதை நன்கு குறிக்கப்பட்டமை சிறந்ததொரு விளக்கமாம் (தி.5ப.100.பா.7). இப்பெற்றிவான விளக்கங்கள் பல்வகைப் பொருளைப் பலருக்கும் இனிது புலப்படுத்துவனவாகும்.
உண்மைப் பொருள்கள்:
     இறைவனது அடையாளங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உண்மையை உணர்த்துவது என்பதே மெய்யுணர்ந்தோர் கண்ட உண்மை. அவ்வுண்மை இவ்வுரையுள் நன்கு விளக்கப்பட்டுள்ளது. சில இடங்களைக் குறிப்பிடுதல் பொருந்தும்.

"பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பது மைந்தலை நாகமே"

(தி.5.ப.9.பா.6)

என்பதில், ஐந்தலை நாகம் என்பது குண்டலினி எனப்படும். சுத்த