58 | ஐந்தாம் திருமுறையின் உரைச்சிறப்பு | (ஐந்தாம் திருமுறை) | |
| மாயை எனவும், அதன் தலை ஐந்தும் சுத்தமாயையின் காரியமாகிய 'சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை' என்னும் சுத்த தத்துவங்கள் எனவும் உண்மைப் பொருள் புலப்படுத்தப் பட்டுள்ளது. | "மறையும் ஓதுவர் மான்மறிக் கையினர் கறைகொள் கண்ட முடைய கபாலியார் துறையும் போகுவர் தூயவெண் ணீற்றினர் பிறையுஞ் சூடுவர் பேரெயி லாளரே" | | (தி.5.ப.6.பா.1) | என்னும் திருப்பாடல் முழுவதற்கும் சிறந்த உண்மைப் பொருகள்கள் வெளியிடப்பட்டுள்ளன, அவற்றின் சுருக்கம். 'மறை ஓதுதல், உலகிற்கு ஒழுக்கநெறி வகுத்தல்; மான்மறி ஏந்துதல், வேதத்திற்கு முதல்வன் தானே என்பதை விளக்கல்; கறைக்கண்டம் கொள்ளுதல், பேரருள் தன்வயம் என்னும் குணங்களைக் காட்டல்; கபாலம் ஏந்தல், உயிர்களின் செருக்கை அறுத்து இன்பம் தருதல் துறைபோதல், எக்கலைக்கும் முதல்வனாதல்; பிறை சூடுதல்; உயிர்களின் அக இருளைப் படிமுறையாற் போக்கும் நல்லுணர்வுடைமையும் இளைத்துச் சார்ந்தார்க்குச் சார்பாய் நின்றருளுதலும்.' என்பது. மற்றும் இன்னன பல இதனுட் காணலாகும். | சித்தாந்தக் கருத்துக்கள்: | 'தோந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம்' எனப்பாராட்டப்படும் சித்தாந்தப் பொருள்கட்கெல்லாம் மூலமாய் உள்ளவை திருமுறைகளாம். அதனால், சித்தாந்த நுண்பொருள்களைத் திருமுறைகளில் நுனித்துணர்தலே திருமுறை உணர்வை நிரப்புவதாகும். அஃது எல்லோர்க்கும் கூடாது, சித்தாந்த உணர்வினர்க்கே கூடுவதாகலின், அந்நுண்பொருள்களை இவ்வுரையுள் இனிது விளங்க ஆங்காங்கு விளக்கியிருத்தல் உரையாசிரியர்களது சித்தாந்தப் பேருணர்வை விளக்குவதுடன், பலரும் அந்நுண்பொருளை உணர்ந்து பயன்பெறச் செய்வதாம். | அந்நுண்பொருள்களில் ஒன்று இரண்டு வருமாறு:"கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை - அரும்பொப் பானை" என்பவற்றிற்கு, (தி.5.ப.3.பா.2) இறைவன் சாதகர்க்கு அவர் சாதித்த வழித்தோன்றுதலையும்,சீவன் முத்தர்க்கு யாண்டும் வெளிப்பட்டு நின்றே அருளுதலையும், சரியை முதலிய மூன்றில் நிற்பார்க்கு அவர் உள்ளத்தே தோன்றி விரிந்துவருதலையும் பொருளாகக் குறித்தமை, "உருவினை", "அருவினை" எனப் போந்தவற்றிற்கு, (தி.5. ப4. பா.8.கு-ரை) 'அருவம்' அருவுருவம், உருவம் என்னும் நிலைகளைக் கடந்த | | |
|
|