2. பொ-ரை: பண்வடிவானவரும், பவளத்தொகுதி போன்ற மாமணி மேனியுடைய அண்ணலும், தேவர்கள் தொழும் முதல்வரும், திருநீற்றுப்பொடியணிந்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தை நண்ணினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: பண்ணினை - இசை வடிவானவனை. பவளமாமணித்திரள் - பவளமணிக்குவியல் போன்ற. ஆதியை - முதன்மையானவனை. நண்ணில் அல்லது - சென்று தொழுதால் அல்லாமல். சுண்ணம் - வாசனைப்பொடி. வெண்பொடியையே வாசனைப் பொடியாக அணிந்தவர். 3. பொ-ரை: தம்மைப் பற்றுக்கோடாக அடைந்தவரது மிக்க துயரங்களைக் களைபவரும், இடபம் ஏறுபவரும், விளங்கும் சடையுடையவரும் ஆகிய பெருமான் உறைகின்ற பாயும் கெடில நீர்சுற்றிச் சூழ்கின்ற திருவதிகைவீரட்டத்தைக் கற்ற பின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: உற்றவர்தம் - தம்மை அடைந்தவர்களுடைய. உறு நோய் - மிக்க துன்பங்களை. பெற்றம் - எருது. பிறங்கு - விளங்குகின்ற. சுற்றும் - சுற்றிலும். கற்கில் அல்லது - துதித்தால் அல்லது. 4. பொ-ரை: முதிராத வெள்ளிய பிறையினைச் சூடும் முதல்வரும், சினக்கப்பட்டார் வாழும் மூன்று புரங்கள் தீயெழுமாறு |