பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)53.திருஅதிகைவீரட்டம்571

விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டம்
கற்றா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
4
1604.
பல்லா ரும்பல தேவர் பணிபவர்
நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன்
வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டம்
கல்லே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
5
1605.
வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக்
கொண்டான் கோல மதியோ டரவமும்
விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டம்
கண்டா லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
6

மேருமலையாகிய வில்லைத் தாம் கொண்டு எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கற்றால் அல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
     கு-ரை: முற்றா - இளைய. செற்றார் - பகைவர். வில்தான் கொண்டு எயில் எய்தவர் எனப்பிரிக்க.
     5. பொ-ரை: பலவகைப்பட்ட தேவர்களாலும் பணியப்படுபவரும், நல்லார்களாலும் விரும்பிப் பரவப்படுபவரும், வில்லால் மூவெயில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கல்லேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
     கு-ரை: பல்லார் - பலமக்கள். தேவர் என்புழி உம்மை விரிக்க. நல்லாரும் - நல்லவர்களும். நயந்து - விரும்பி.
     6. பொ-ரை: வண்டுகள் பொருந்திய கொன்றையும், ஊமத்தமலரும், பிறையும், அரவமும் அழகு வளரும் தம் சடையிற் கொண்டவரும், பகைவரது மும்மதில்களை எய்தவரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைக் கண்டபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
     கு-ரை: வண்டார்-வண்டுகள் பொருந்திய. மத்தம்-ஊமத்தம். வளர்சடைக் கொண்டான். கோலமதியோடு அரவமும் கொண்டான் என்க. விண்டார்-பகைவர்.