| | 7. பொ-ரை: இடுப்பிற் பொருந்திய கோவண ஆடையரும், வழியெல்லாம் அலையெறியும் ஒள்ளிய நீர் பாய்கின்ற கெடிலக் கரையில் விளங்கும் நறுமணமுடைய திருநீற்றுப் பூச்சினரும் ஆகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைப் பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: அரையார்-இடுப்பிலே பொருந்திய. ஆறெல்லாம்-வழிகளெல்லாம். திரையார்-அலைகளோடு கூடிய. ஒண் புனல்பாய்-ஒள்ளிய தண்ணீர் பாய்கின்ற. விரையார்-மணம் பொருந்திய. கரையேனாகில்-என் குறைகளைச் சொல்லேனாயின். 8. பொ-ரை: திருநீறு அணிந்த பெருந்தோளராகிய மலமற்றவரும், இடபக்கொடியுடையாரும் ஆகிய பெருமான் உறைவதும் புனல் பாய்கின்ற கெடில ஆற்றினுடைய கரையில் உள்ளதுமாகிய திருவதிகை வீரட்டத்தைக் கூறினாலல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ? கு-ரை: தடம்-பெரிய. நின்மலன்-மலமற்றவன். ஆறுடைக்கெடிலம்-பல கால்வாய்களாகிய வழிகளை உடைய கெடிலம். ஏறுடைக்கொடி-இடபக்கொடி. 9. பொ-ரை: சிவந்த கண்ணை உடைய திருமாலாகிய விடையேறிய திருவருட்செல்வரும், பசிய கண்ணை உடைய ஆனையின் |