பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)53.திருஅதிகைவீரட்டம்573

அங்கண் ஞாலம தாகிய வீரட்டம்
கங்கு லாகவென் கண்துயில் கொள்ளுமே.
9
1609.
பூணா ணாரம் பொருந்த வுடையவர்
நாணா கவ்வரை வில்லிடை யம்பினால்
பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டம்
காணே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
10
1610.
வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கம்
திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை
விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம்
உரையே னாகிலென் கண்துயில் கொள்ளுமே.
11

பச்சைத் தோலை உரித்துப் போத்தருளியவரும், அழகிய இடமகன்ற உலகமுழுதானவருமாகிய பெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் (காணேனாயின்) என் கண்கள் இரவாயினும் ஆக, உறக்கம் கொள்ளுமோ?
     கு-ரை: செங்கண்மால் விடை சிவந்த கண்களை உடைய திருமாலாகிய எருது. ஈருரி-உரித்ததோல். அங்கண்-அழகிய இடமகன்ற. ஞாலமதாகிய-உலகத்ததாகிய. கங்குல் வீரட்டம் ஆக அல்லது என்க. இரவுப்பொழுதில் வீரட்டத்தை அடைந்தால் அல்லது என்பது கருத்து. அல்லது என்றது முன் பாடல்களிலிருந்து வருவிக்கப் பெற்றது.
     10.பொ-ரை: பூண், நாண், மாலை முதலியவற்றைப் பொருந்த உடையவரும், அழகிய மேருமலையாகிய வில்லிடை நாணுடன் கூடிய அம்பினால், பகைவர் மும்மதில்களை எய்தவர் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் காணேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
     கு-ரை: பொருந்த-தமக்கு ஏற்ற வரையில். பூண்-அணிகலன.் நாண்-பூணநூல் முதலிய கயிறுகள். ஆரம் -மலர்மாலைகள். நாக நாண்வரை வில்லிடை-இமயவில்லின் வாசுகிப் பாம்பாகிய நாணில். பேணார்-பகைவர்.
     11, பொ-ரை: மலைகளில் நிறைந்த வயிரத்தின் தொகுதியும் மாணிக்கமும் ஆகியவற்றைக்கொண்டு அலையார்ந்த புனல்