பக்கம் எண் :

574திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1611.
உலந்தார் வெண்தலை உண்கல னாகவே
வலந்தான் மிக்கவவ் வாளரக் கன்றனைச்
சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம்
புலம்பே னாகிவென் கண்துயில் கொள்ளுமே.

12

திருச்சிற்றம்பலம்


பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ளதும், நறுமணமிக்க திருநீற்றினையணிந்த இறைவன் விளங்குவதுமாகிய திருவதிகை வீரட்டத்தை உரையேனாகில் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
     கு-ரை: வரையார்ந்த-மலையிடத்தே பொருந்திய. திரள்-குவியல் மாணிக்கத்திரள் எனவும் கூட்டுக. உரையேனாகில்-புகழ்ந்து பாடேனாயின்.
     12, பொ-ரை: இறந்தவர்களது(வாழ்நாள் உலந்தார்) வெள்ளிய தலைகளை உண்கலனாகக்கொண்டு, வெற்றிமிக்க அவ்வாளரக்கனாகிய இராவணனைச் சிலம்பணிந்த திருவடி விரலால் ஊன்றிய பெருமான் உறையும் திருவதிகைவீரட்டத்தைப் புலம்பிப்பாடேனாயின் என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
     கு-ரை: உலந்தார்-இறந்தவர.் உண்கலன் -உண்ணும் பாத்திரம.் வலம்-வெற்றி. புலம்பேனாகில்-மனங்கரைந்து பலகாலும் சொல்லிப் புகழேனாயின்.
 

 

திருநாவுக்கரசர் புராணம்

அரி அயனுக் கரியானை அடியவருக் கெளியானை
விரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னத்தமுதைத்
தெரிவரிய பெருந்தன்மைத் திருநாவுக்கரசுமனம்
பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயுநாள்.

-தி,12.சேக்கிழார்.