பக்கம் எண் :

576திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1613,
நீள மாநினைந் தெண்மல ரிட்டவர்
கோள வல்வினை யுங்குறை விப்பரால்
வாள மாலிழி யுங்கெடி லக்கரை
வேளி சூழ்ந்தழ காயவீ ரட்டரே.
2
1614.
கள்ளி னாண்மல ரோரிரு நான்கு கொண்டு
உள்கு வாரவர் வல்வினை யோட்டுவார்
தெள்ளு நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை நீறணி மேனிவீ ரட்டரே.
3
1615.
பூங்கொத் தாயின மூன்றொடோ ரைந்திட்டு
வாங்கி நின்றவர் வல்வினை யோட்டுவார்
வீங்கு தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத் தோலுடை யாடைவீ ரட்டரே.
4

     2, பொ-ரை: வட்டமாகவும், பெரிதாகவும் ஓடுகின்ற கெடில நதிக்கரை வேலிபோல் சூழ்ந்த வீரட்டத்திறைவர், தம்மை இடைவிடாது நினைந்து எண்வகை மலர்களால் வழிபடுபவர்களின் கொடிய வல்வினையை நீக்குவர்.
     கு-ரை: நீளமா-இடைவிடாது. கோளவல்வினையும்-கொடுமை பொருந்திய வலிய வினைகளையும். ஆல்-அசை. வாளம்-வட்டமாக. மால் இழியும்-பெரிதாக ஓடுகின்ற. வேலி என்பது வேளி எனத் திரிந்தது,
     3.பொ-ரை: தெள்ளிய நீர்வயலிற் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய வெண்ணீறணிந்த திருமேனி உடைய பெருமான், தேன் ஒழுகுகின்ற புதிய எட்டு மலர்களைக் கொண்டு அருச்சித்துத் தம்மை உள்குவார்களுடைய வல்வினைகளை ஓட்டுவார்.
     கு-ரை: கள்ளின் நாண்மலர்- தேன் நிறைந்த மலர். ஓர் இருநான்கு - எட்டுமலர்கள். தெள்ளுநீர்-தெளிந்த நீர்.
     4.பொ-ரை: செறிந்த குளிர்நீர் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய