7. பொ-ரை: வைதிகத் தேரின் உறுப்புக்களாய் நின்ற விண்ணோர்களுக்குத் தலைவனும், நிலைபெற்ற உயிர்கள் ஓதி ஏத்தும் ஒப்பற்றவனும், வண்டுகள் கோதி ஒலிக்கும் மலர்களின் வளமுடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக. கு-ரை: வேதமாய - வேத வடிவினனாய் உள்ள. வேதமாய விண்ணோர்கள் - வேதம், வைதிகத்தேர்; அதன் உறுப்புக்களாய் இருந்த விண்ணோர். விண்ணோர்கள் கருவிகளாக சிவபிரான் கருத்தாவாதலை அத்தேரின் அமைப்பு காட்டிற்று. மன்னுயிர் - உலகில் நிலைபெற்ற உயிர்கள். ஓதியேத்தும் ஒருவனை - கற்றுத் துதிக்கும் முதல்வனை. கோதி - மகரந்தங்களை வாயால்கிண்டி. அறையும் - ஒலிக்கும். வேதநாயகன் - வேதங்களுக்குத் தலைவன். 8. பொ-ரை: முறையாகத் தொழுவார்களது தலைவனும், துன்பங்களாயினவற்றை நீக்கும் செம்மணி போல்வானும், வண்டுகள் கிண்டியொலிக்கும் மலர் வனம் உடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக. கு-ரை: நீதியால் - முறையாக. வாதை - துன்பம். விடுக்கும் - நீக்கும். 7ஆவது பாடல் பின்னிரண்டு வரிகளே இங்கும் அமைந்து உள்ளன. 9. பொ-ரை: மாலும் பிரமனும் அறியவியலாத, பாலனைய மென்மொழியுடைய உமையொரு கூறனாகிய அழகுடைய பொழில் |