பக்கம் எண் :

596திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

கோல மாம்பொழில் சூழ்திருக் கோளிலி
நீல கண்டனை நித்தல் நினைமினே.

9

1651.
அரக்க னாய இலங்கையர் மன்னனை
நெருக்கி யம்முடி பத்திறுத் தானவற்
கிரக்க மாகிய வன்றிருக் கோளிலி
அருத்தி யாயடி யேதொழு துய்ம்மினே.

10

திருச்சிற்றம்பலம்


சூழும் திருக்கோளிலியில் உள்ள நீலகண்டனை நாள் தோறும் நினைந்து தொழுவீராக.
     கு-ரை: அறிவொணா - அறியமுடியாத. பாலின் மென்மொழி - பாலனைய மென்மையான இனிய மொழி. நித்தல் நாடோறும்.
     10. பொ-ரை: அரக்கனாகிய இலங்கையர் மன்னன் இராவணனை நெருக்கி, அம்முடிகள் பத்தினையும் இறுத்தவனும், பின் அவனுக்கு இரங்கியவனும் ஆகிய பெருமான் உறையும் திருக்கோளிலிக்கு விருப்பமாகி, அவன் அடிகளே தொழுது உய்வீராக.
     கு-ரை: அம்முடி - அழகிய முடி. இறுத்தான் - அழித்தவன். அவற்கு - அவனுக்கு. அருத்தி - ஆசை.
 

 

திருப்பெருந்துறைப் புராணம்

பாலிடை நஞ்சங் கண்டு
    பதைபதைத் தோடி யோர்பால்
நூலிடை யவருண் பாக்கு
    நுவன்றமா லயனுண் ணாணப்
பாலிடை நஞ்சங் கண்டு
    பதைப்பின்றித் தாமுண் டோர்பால்
நூலிடை யவரே யென்னப்
    பொலியுநோன் மையர்தாள் போற்றி.
 

-மீனாட்சி சுந்தரம்பிள்ளை.