பக்கம் எண் :

602திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1661.
செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல்
எருத்தி றவிர லாலிறை யூன்றிய
அருத்த னைப்பழை யாறை வடதளித்
திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே.

10

திருச்சிற்றம்பலம்


தன்மையில்-உயிர்களைச் செலுத்தும் சிறப்பித்தன்மை வாய்ந்த. இருந் தமிழே படித்து-பெருமையுடைய தமிழ் மொழியைப்படித்து. வேற்று மொழிக்கில்லாத் தனிச்சிறப்புடைய ஞாலம் அளந்த மேன்மை தெய்வத்தமிழ் என்பதை நினைவு கூர்க. தெய்வத்தமிழைப் படித்தும் என உம்மை கூட்டுக. ஆளுறா-அம்மொழியின் பயனாய் விளங்கும் இறைவனை உணர்ந்து அவனுக்கு ஆளாக அடையாத. ஆயிரம் சமணும்-அவ்வூர் சமணப் பள்ளியில் அமைந்த ஆயிரவராகிய கூட்டம். சமணர் தமிழ்மொழியில் வல்லுநர்களாகி இருந்தும், அதன் பயனை அறியாது ஒழுகினதை நினைவு கூர்க. அழிவாக்கினான்- அழியச் செய்தான். என-என்று சொல்ல. வீடும்-அழியும்.

10, பொ-ரை: போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும், பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள் வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும்.
கு-ரை: செருத்தனை-போரை. சேண்-புகழால் நீண்ட. எருத்து - பிடரி. இற-நொறுங்க. இறை-சிறிதே. அருத்தனை-பொருள் வடிவானவனை. திருத்தன்-அழகியவன்.
 

 

திருநாவுக்கரசர் புராணம்

தலையின் மயிரைப் பறித்துண்ணுஞ்
    சாதி அமணர் மறைத்தாலும்
நிலையி லாதார் நிலைமையினால்
    மறைக்க ஒண்ணு மோஎன்னும்
விலையில் வாய்மைக் குறுந்தொகைகள்
    விளம்பிப் புறம்போந் தங்கமர்ந்தே
இலைகொள் சூலப் படையர்சேர்
    இடங்கள் பிறவும் தொழுவணைவார்.

-தி.12. சேக்கிழார்.