பெருமானை. அருள் திறத்தை உடைய அழகு பொருந்திய பழையாறை வடதளியில் தெளிவிக்கும் பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும். கு-ரை: திரைதிரள் - வரிசையாக உருட்டிய சோற்றுத் திரள். திரைவரிசைகளை ஒத்த எனினுமாம். கவளம் - உணவு. திணிக்கும் - வாயில் பெய்துகொள்ளும். பிரட்டர் - வஞ்சகர். பிரித்த - அச் சமண சமயத்திலிருந்து நீங்கச் செய்த. அருள் திறத்து-திருவருள் வலிமையொடு கூடிய தெருட்டரை- தம் முண்மையை உலகுக்குத் தெளியச் செய்பவனாகிய சிவபெருமானை. 8,பொ-ரை: அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும், வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம். கு-ரை: ஓதினத்து எழுத்தஞ்சும்- ஓதவேண்டிய திருவைந்தெழுத்தையும். உணரா-ஓதியுணராத. வேதினைப்படுத்தானை- துன்பம் செய்தவனை. வெங்கூற்று -கொடிய கூற்றை. உதை- உதைத்த. பாதன்-திருவடிகளையுடையவன். 9.பொ-ரை: மெய்ம்மையும் பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின் கட்படுத்தவனும்இ பாய்கின்ற பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லுமளவிலேயே வல்வினைகள் கெடும். கு-ரை: வாய்-வாயினால். வாய் - வாய்ந்த. சிவனுக்கு ஆளாம் |