பக்கம் எண் :

600திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

அள்ள லம்புன லாறை வடதளி
வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே.
5
1657.
நீதி யைக்கெட நின்றம ணேயுணும்
சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி யைப்பழை யாறை வடதளிச்
சோதி யைத்தொழு வார்துயர் தீருமே.
6
1658.
திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண்
பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை
அருட்டி றத்தணி யாறை வடதளித்
தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே.
7

சேறாகிய நீர்வளம் உடைய பழையாறை வடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும்.
     கு-ரை: ஒள்ளரிக்கண்ணார்-ஒளியோடு கூடிய செவ்வரி படர்ந்த கண்களையுடைய பெண்கள். அமணேநின்று-அம்மணமாகி நின்று. உணும் -உண்ணும். கள்ளரை-கள்ளத்தனமுடையவர்களை. உடையின்றிப் பெண்களிடம் உணவிரக்கும் சமண வாழ்க்கையைக் கருதியது. கடிந்த மகளிர் இடும் பிச்சையை ஏற்று காமமாதிகளை உள்வைத்து நிர்வாணராய் உண்ணும் சமணத் துறவியரை வெறுத்த கரும்பு ஊறலை-கருப்பஞ்சாறு போன்றவனை. அள்ளல்புனல் - சேற்று வளம் சான்ற நீர் வாடும் - வருந்தும்.
     6. பொ-ரை: முறைமை கெடநின்று ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும், ஆதியும் ஆகிய புழையாறைவடதளியில் உள்ள சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும்.
     கு-ரை: நீதியைக்கெட- நீதிமுறைகெட. அமணே நின்று - அம்மணமாகவே நின்று. உணும்-இரந்துணும். சாதியை -சமண மதத்தின் செயல்களை. கெடுமாறு செய்த - அழியுமாறு செய்த. சங்கரன் -அழிப்பவன். ஆதியை - முதல்வனாய் விளங்குபவனை.
     7. பொ-ரை: திரட்டிய இரையாகிய சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த