பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)58.திருப்பழையாறைவடதளி599

அண்ட ரைப்பழை யாறை வடதளிக்
கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே.
3
1655.
முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக்
கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப்
படைய ரைப்பழை யாறை வடதளி
உடைய ரைக்குளிர்ந் துள்குமென் னுள்ளமே.
4
1656.
ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணும்
கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை

தேவதேவனும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள திருநீல கண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன.
     கு-ரை: குண்டர்-கொழுத்தவர். குணமில்லர்-நற்குணமில்லாதவர். கூறை - ஆடை. இல்-இல்லாத. மிண்டர் - வலியர். உடையின்றித் திரிதல் சமணகுருமார்வழக்கு. துரந்த-நீக்கிய, அரசனைக் கொண்டு ஒழித்த. விமலன் - குற்றமற்றவன். அண்டர்- தேவர் வடதளிக் கடரை- பழையாறை வடதளியாகிய தலத்தில் உறைபவரை.
     4. பொ-ரை: முடைநாற்றம் உடையோரும், தலையை மழித்த மொட்டையர்களும், கீழானவர்களுமாகிய சமணர்களை நீக்கியவரும், கனலையும் வெண்மழுப் படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து நினைகின்றது.
     கு-ரை: முடையர்- உடல் கழுவாமை, பல் விளக்காமை முதலியவற்றால் முடைநாற்றமுடையர். தலை முண்டிக்கும்-மயிர் பறித்து மொட்டையாக்கி மழுங்கலாகக் கொள்ளும். மொட்டரை-மொட்டையரை. கடையரை -ஒழுக்கத்தால் இழிந்தவரை. கடிந்தார்-அழித்தவராகிய. கனல்- (கனலும்) எரிக்கும். வெண்மழுப்படையரை-வெள்ளிய மழுவாகிய ஆயுதத்தையுடையவரை. உள்கும் - நினைக்கும்.
     5. பொ-ரை: ஒளியும் அரியும் உடைய கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக் கடிந்தவரும், கரும்பின் ஊறும் சாறு பாய்ந்தோடிச்