பக்கம் எண் :

598திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1653,
மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை
தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக்
காக்கி னானணி யாறை வடதளி
நோக்கி னார்க்கில்லை யால்அரு நோய்களே.
2
1654.
குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில்
மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை

     கு-ரை: கையர்-வஞ்சனையுடையவர்கள். தலையெல்லாம்-தலையிலுள்ள உரோமங்கள் எல்லாவற்றையும் தலை-ஆகுபெயர். பறிக்கும்-ஒவ்வொன்றாகக் களையும். தலைமயிரைப் பறித்தல் சமணர் இழிவழக்கு. சமண்கையர்-கையையுடைய சமணர். கை- ஓழுக்கமுமாம். உள்நிலையினால்-தங்கள் பொய்மை நிலைமையினால். மறைத்தால்-மறைக்க முயற்சித்தால். மறைக்கொண்ணுமோ- மறைத்தற்கியலுவதொன்றாமோ. ஏகாரவினா எதிர்மறை குறித்தது. அலையினார்-அலைகள் பொருந்திய; நீர்வளம் சான்ற. அலை-ஆகுபெயர் அல்லது அலைக்கண்மருங்கே என்க. நிலையினான்-எழுந்தருளி இருப்பவன். சமணர்கள் பழையாறை வடதளித் திருக்கோயிலில் இருந்த பெருமானை மறைத்து வைத்திருந்தகாலையில், அங்குச் சென்ற அப்பர், பெருமானைக் காணாது உண்ணா நோன்பு கொண்டு பின்பு இறைவன் காட்சிதரப் பாடியதாதலின் இப்பாடலில் மறைத்தால் மறைக்கவொண்ணுமோ என்றார்கள்.
     2.பொ-ரை: மூக்கினால் ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி, அக்குண்டிகை தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை.
     கு-ரை: சமணர்களின் மந்திரங்கள் மெல்லெழுத்தே மிக்கு மூக்கொலியால் ஓதத்தக்கன ஆதலின் முரன்றோதி என்றார். "ஞமண ஞாணன" (சுந்தரர் பதிகம்) தூரறுத்தே தனக்கு ஆக்கினான்- சமணர் கூட்டங்களை வேரோடு களைந்து சமணர் மறைத்த கோயிலைத் தன்னதாகக் காட்டியவன். அணி-அழகிய. அருநோய்கள்-நீங்குதற் கரிய துன்பங்கள். நீர்க்குண்டிகைகள் மூன்றை ஒருசிறு உறியில் தூக்கித் திரிதல் சமணர் வழக்கு.
     3. பொ-ரை: குண்டர்களும், நற்குணமில்லாதவர்களும், உடையணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத் துரத்திய விமலனும்,