பக்கம் எண் :

616திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1684.
அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல்
விருப்புச் சேர்நிலை விட்டுநல் விட்டமாய்த்
திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக்
கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.

5

1685.

பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப்
பூம்புன லும்பொ திந்தபுத் தூருளான்
நாம்ப ணிந்தடி போற்றிட நாள்தொறும்
சாம்ப லென்பு தனக்கணி யாகுமே.

6


    கு-ரை: வேதனை - வேதங்களின் வடிவாயுள்ளவனை, அல்லது வேதங்களை அருளிச்செய்தவனை. மிகு - சிறந்த. வீணையில் மேவிய கீதனை - வீணையில் பொருந்திய இசை வடிவானவனை. கிளரும் - விளங்கும். நறும் - மணங்கமழும். கொன்றையம் போதனை - கொன்றைமலரணிந்தவனை. புனல்சூழ்ந்த - நீர்வளம் சூழ்ந்த.
    5. பொ-ரை: கோங்கின் அரும்புபோன்ற முலையுடைய பெண்களோடு கூடித் துன்பங்கள் மிகுந்த வாழ்க்கையின்மேல் விருப்பம் சேர்கின்ற நிலையைவிட்டு நீங்கி, நல்ல பக்தி கொண்டு, திருப்புத்தூரில் உள்ள இறைவனைச் சிந்திக்கச்சிந்திக்கக் கரும்புச் சாற்றைவிடத் தித்திக்கும்; காண்பீராக.
    கு-ரை: அரும்புபோல் - தாமரையரும்புபோலும். அருப்பு - வலித்தல் விகாரம். அல்லல் - துன்பம் தருகின்ற. விருப்புச் சேர்நிலை - விருப்பம் சேர்க்கும் தன்மை. நல்லிட்டமாய் - நல்ல விருப்பத்தோடு. சிந்தை செயச்செய - மனத்தால் நினைக்க நினைக்க. அண்ணிக்கும் - இனிக்கும்.
    6. பொ-ரை: பாம்பும், பிறையும், பொலிவுள்ள கங்கைநதியும் படர்ந்த செஞ்சடையின்கண் பொதிந்த புத்தூரில் உள்ள புனிதர், நாள்தொறும் நாம் பணிந்து, தன் திருவடியைப் போற்றிட, தான் சாம்பலையும், எலும்பையும் தமக்குஅணியாக்கொள்வர்.
    கு-ரை: படர் - தங்கிய. புன் - மெல்லிய. பூம்புனல் - அழகிய கங்கையாறு. பொதிந்த - மறைத்துவைத்த. நாம் பணிந்து நாள்தோறும் போற்றிடப் புத்தூருளான் என வினை முடிவு செய்க. அவனுடைய