உறக்க ணித்துரு காமனத் தார்களைப் புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே. | |
| 2 |
1682. அரிசி லின்கரை மேலணி யார்தரு புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் பரிசொடும்பர விப்பணி வார்க்கெலாம் துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே. | |
| 3 |
1683. வேத னைமிகு வீணையில் மேவிய கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம் போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை நாத னைநினைந் தென்மனம் நையுமே. | |
| 4 |
|
| மிகுதியாகக் கருத்தில் எண்ணி உருகாத மனத்தை உடையவர்களைப் புறக்கணித்திடுகின்ற புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே! (எம்மையாண்டருள்க). |
| கு-ரை: பிறைக்கண்ணிச் சடை - பிறையாகிய தலைமாலையை உடைய சடை. கறைக்கணித்தவர் - தம் குற்றங்களை எண்ணி ஆராய்ந்தவர். கண்டவணக்கத்து ஆய் - தரிசித்த வணக்கத்தை மேற்கொண்டு. உற - பொருந்த. கணித்து - இறைவன் புகழைஎண்ணி. புறக்கணித்திடும் - வெறுக்கும். |
| 3. பொ-ரை: அரிசிலாற்றுக்கரையின்மேல் உள்ள அழகு நிறைந்த மதிலை உடைய நம் திருப்புத்தூர்ப் புனிதரை, வணங்கவேண்டிய முறைமைப்படிப் பரவிப் பணிவார்க்கெல்லாம் குற்றமற்ற நன்னெறி தோன்றும்; காண்பீராக. |
| கு-ரை: அரிசிலின் - அரிசிலாற்றின். அணி ஆர்தரு - அழகு பொருந்திய. புரிசை - மதில்களோடு கூடிய. புனிதன் - தூயன். பரிசொடும் - நல்ல தன்மையோடும். பரவி - தோத்திரித்து. பணிவார்க்கெல்லாம் - வணங்குவார் எல்லாருக்கும். துரிசில் நன்னெறி - குற்றமற்ற நல்ல வீட்டுநெறி. தோன்றிடும் - உண்டாம். |
| 4. பொ-ரை: வேதங்கள் ஓதுபவனை, வீணையில் மிகுகின்ற கீதங்கள் உடையவனை, மணம் வீசுகின்ற கொன்றையாகிய அழகிய போதினை அணிந்தவனை, அரிசிற் புனல் சூழ்ந்த புத்தூரில் உள்ள நாதனை, என் மனம் நினைந்து நெகிழ்கின்றது. |