பக்கம் எண் :

664திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

குயிலா ரும்பொழிற் கொண்டீச் சுரவனைப்
பயில்வா ரும்பெரு மைபெறும் பாலரே.

9

1779.

நிலையி னார்வரை நின்றெடுத் தான்றனை
மலையி னாலடர்த் துவிறல் வாட்டினான்
குலையி னார்பொழில் கொண்டீச் சுரவனைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

10

திருச்சிற்றம்பலம்


இறைவனைப் பயில்கின்ற அடியவர்கள் பெருமை பெறும் பகுதியை உடையவராவர்.
     கு-ரை: அயிலார் அம்பு - எரி கூர்மை பொருந்திய அம்பு அக்கினிதேவனாக. திரிபுரமழிக்கச் சென்றகாலையில் அக்கினிதேவன் அம்பாயினான் என்ற கதைக்குறிப்பைக் கொண்டது. மேரு - இமயம். எயிலாரும் - திரிபுரக் கோட்டையில் உள்ளவரும். பொடியாய் விழ - தூளாகிக் கீழே விழ. பயில்வாரும் - வழிபடுவார்களும். உம்மையால் புகழ் கூறுபவர்களோடு மனம், மெய், அறிவு ஆகியவற்றால் வழிபடுபவர்களையும் கொள்க. பாலர் - தன்மையை உடையவர்.
     10. பொ-ரை: நிலையினைப் பொருந்திய திருக்கயிலையை ஆணவத்தொடு நின்று எடுத்த இராவணனை மலையினால் வருத்தி அவன் ஆற்றலை வாட்டியவனாகிய, குலைகள் பொருந்திய சோலையையுடைய பொழில்கள் சூழ்ந்த கொண்டீச்சுரத்து இறைவனைத் தலையினால் வணங்கலே தவம் ஆகும்.
     கு-ரை: நிலையினார்வரை - ஊழிதோறூழி முற்றும் அழியாது நிலைபெறும் அரிய மலையை. தன் உடல் வலிமையின் நிலையிற் பொருந்தி அதன் எல்லையிலே நின்று. விறல் -வலிமை. குலையினார் இன் சாரியை, பொழில்; குலைகளை உடைய சோலை. தவமாகும் - சிறந்த தவம் அதுவேயாகும்.