1776. அல்ல லோடரு நோயி லழுந்திநீர் செல்லு மாநினை யாதே கனைகுரல் கொல்லை யேறுடைக் கொண்டீச் சுரவனை வல்ல வாறு தொழவினை மாயுமே. | |
| 7 |
1777. | நாறு சாந்தணி நன்முலை மென்மொழி மாறி லாமலை மங்கையொர் பாகமாக் கூற னாருறை கொண்டீச் சுரநினைந் தூறு வார்தமக் கூனமொன் றில்லையே. | |
| 8 |
1778. | அயிலார் அம்பெரி மேருவில் லாகவே எயிலா ரும்பொடி யாய்விழ எய்தவன் | |
|
| 7. பொ-ரை: துன்பத்தோடு அருநோய்களில் அழுந்திச் செல்லும் நெறி எது என்று நினையாமல், நீர், கனைத்த குரலை உடைய முல்லை நிலத்துக்குரிய இடபவாகனத்தை ஊர்ந்தவனாகிய கொண்டீச்சுரத்து இறைவனை வல்லவாறு தொழுவீரேயாயின் வினைகள் மாயும். |
| கு-ரை: அல்லலோடு - துன்பத்தோடு. அடரும் - நெருக்கு கின்ற. நோயில் - பிணியில். செல்லுமா - பயனின்றி இறந்தொழியுமாறு. நினையாதே - நினைக்காமல். கனைகுரல் - கனைக்கின்ற ஒலி. கொல்லையேறு - முல்லை நிலத்து எருது. வல்லவாறு - இயன்றவாறு. |
| 8. பொ-ரை: நறுமணம் வீசும் கலவைச்சாந்தணிந்த நல்ல தனங்களையும் மெல்லிய மொழிகளையும் உடைய மாறுபாடற்ற உமாதேவியை ஒருபாகமாகக்கொண்ட கூற்றை உடையவராகிய பெருமான் உறைகின்ற கொண்டீச்சுரத்தை நினைத்து நெஞ்சில் மேலும் மேலும் எண்ணுபவர்களுக்குக் குற்றம் ஒன்றும் இல்லை. |
| கு-ரை: நாறு - மணம் கமழ்கின்ற. சாந்து - சந்தனம். மாறு - ஒப்பு. கூறனார் - உடலில் இடக்கூற்றை அளித்தவர். ஊறுவார் - செல்லுவார். உறுவார் என்பது முதல்நீண்டு ஊறுவார் என்றாயது. ஊனம் - குற்றம். |
| 9. பொ-ரை: மேருமலையை வில்லாகக் கொண்டு கூர்மையையுடைய ஓரம்பினால் முப்புரங்கள் தூளாகுமாறு விழ எரியால் எய்தவனாகிய, குயில்களை உடைய பொழில் சூழ்ந்த கொண்டீச்சுரத்து |