பக்கம் எண் :

662திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1774.
கேளு மின்இள மைய்யது கேடுவந்
தீளை யோடிரு மல்லது எய்தன்முன்
கோள ராவணி கொண்டீச் சுரவனை
நாளு மேத்தித் தொழுமின் நன்காகுமே.

5

1775.

வெம்பு நோயும் இடரும் வெறுமையும்
துன்ப முந்துய ரும்மெனுஞ் சூழ்வினை
கொம்ப னார்பயில் கொண்டீச் சுரவனை
எம்பி ரானென வல்லவர்க் கில்லையே.

6


(குறள்-41.) என்பதால் தெளிவுபடுதல் அறிதற்குரியது. பயில்வு - பழகுதல். எய்திய - பொருந்திய. கொந்து - பூங்கொத்து.
     5. பொ-ரை: மனிதர்களே! கேட்பீர்களாக; இளமைக்குக் கேடு வந்து சளியோடு கூடிய இருமல் வந்தெய்துவதற்குமுன் கொள்ளுகின்ற பாம்பினை அணிகின்ற கொண்டீச்சுரத்து இறைவனை நாளும் ஏத்தித் தொழுவீராக; உமக்கு நல்லனவே ஆகும்.
     கு-ரை: கேடு வந்து - கெடுதலை அடைந்து. ஈளை - கோழை. இருமல் எய்தமுன் - முதுமை வருமுன்பே. கோளரா - கொள்ளும் வாயையுடைய பாம்பு. நன்கு - முத்தி ஞானம்.
     6. பொ-ரை: பூங்கொம்பைப்போன்ற பெண்கள் பயில்கின்ற கொண்டீச்சுரத்து இறைவனை "எம்பிரான்" என்று ஏத்தவல்லவர்க்கு, வெம்புதற்குக் காரணமாகிய நோயும், துன்பமும், வறுமையும் முதலிய சூழ்தற்குரிய வினைகள் இல்லை.
     கு-ரை: வெம்பும் - உடல் வெதும்பும். வெறுமை - வறுமை. இடர் - துன்பம் துயர் என்பன வேறுபாடுடையன. ஒன்று மனத்துன்பம்,மற்றொன்று உடல் துன்பம், மூன்றாவது பிறவித் துன்பம், இவ்வாறு கொள்ளலாம்.
     சூழ் வினை - நம்மைச் சூழ்ந்துள்ள வினைப் பயன்களாகிய இவை. கொம்பனார் பயில் - பூங்கொம்பு போன்றவர்களாகிய மகளிர் பயில்கின்ற.