பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)70.திருக்கொண்டீச்சுரம்661

1772.
மாடு தானது வில்லெனின் மாநுடர்
பாடு தான்செல்வா ரில்லைபன் மாலையாற்
கூட நீர்சென்று கொண்டீச் சுரவனைப்
பாடு மின்பர லோகத் திருத்துமே.

3

1773.

தந்தை தாயொடு தார மெனுந்தளைப்
பந்தம் ஆங்கறுத் துப்பயில் வெய்திய
கொந்த விழ்பொழிற் கொண்டீச் சுரவனைச்
சிந்தை செய்மின் அவனடி சேரவே.

4


     கு-ரை: சுற்றமும் - சுற்றத்தினரும். துணை - துணைவியாகிய. பேணலொழிந்தனர் - விரும்புதலைத் தவிர்ந்தனர். பற்றலால் ஒருபற்று மற்றில்லை - இறைவனே பற்றுக்கோடாவான் வேறு ஒரு பற்றுக்கோடில்லை. "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு" (குறள். 350) " என்னிலாரும் எனக்கினியாரிலை" (தி.5.ப.21.பா.1.) உலகில் இறைவனது சார்பில்லாது பிறிது ஒரு சார்பில்லை என்று அநுபவம் காட்டியவாறு.
     3. பொ-ரை: செல்வம் இல்லையென்றால், மாநுடர் பெருமையோடு சூழச் செல்வாரில்லை. ஆதலால், பல மாலைகளாற் கூட, நீர் சென்று கொண்டீச்சுரத்து இறைவனைப் பாடுவீராக; அவ்விறைவன் பரலோகத்து இருக்கவைக்கும்.
     கு-ரை: மாடுதானது இல்லெனில் - செல்வம் இல்லையானால். செல்வம் இல்லையானால் அவரவரும் தம்போக்கிற் செல்வர். பாடு - பக்கம். செல்வாரும் என உம்மைதொக்கது. மாநுடர்பாடுதான் செல்வாரில்லை - மனிதர் பெருமையோடு ஒருவரிடத்துச் செல்லுதல் இல்லை. அடியாருடன் நீர் சென்று பலவகைப்பட்ட திருப்பதிகப் பாமாலைகளால் பாடுங்கள். இருத்தும் - அப்பெருமான் இருக்கச் செய்வான்.
     4. பொ-ரை: தந்தையும்தாயும் தாரமுமாகிய கட்டாகிய தளையை அறுத்துப் பூங்கொத்துக்கள் பெருகி மலர்கின்ற பொழில்களை உடைய கொண்டீச்சுரத்து இறைவனைச் சேவடி சேர்வதன் பொருட்டுச் சிந்தை செய்வீர்களாக.
     கு-ரை: தந்தை தாய் மனைவி என்னும் பிணைப்பு "இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை"