பக்கம் எண் :

78தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்(ஐந்தாம் திருமுறை)

கல்வெட்டு:
இத்தலத்தைப்பற்றியனவாக 1902-இல் படியெடுக்கப்பட்டவை பதின்மூன்று கல்வெட்டுக்களும், 1938-இல் எடுக்கப்பட்டவை ஆறும் உள்ளன. அவற்றில் ஏழு கல்வெட்டுக்கள் திருமால் கோயிலில் உள்ளவை. ஏனையவை சத்தியவாகீசரைப் பற்றியன. கல்வெட்டுகளில் இறைவன்பெயர் பிரமபுரீசுவரர் என வழங்கப்பெறுகிறது மாறவர்மன் குலசேகரபாண்டியன், மூன்றாம் இராஜேந்திரசோழன், ஹொய்சள வீரராமநாததேவர், மதுரைகொண்ட பரகேசரிவர்மன், இராஜராஜதேவன் முதலியவர்கள் காலத்தனவாகக் காணப்படுகின்றன. இவையெல்லாம் பெரும்பாலும் நிபந்தம் அளிக்கப்பெற்றமையை அறிவிக்கின்றன.1

5. திருஅன்னியூர்

சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். பொன்னூர் எனவழங்கும். மயிலாடுதுறை-மணல்மேடு பேருந்துகளில் செல்லலாம். வருணன் பூசித்துப் பேறுபெற்றதலம்.
   சுவாமி பெயர் ஆபத்சகாயேசுரர். அம்மையின் பெயர் பெரிய நாயகியம்மை. தீர்த்தம் வருணதீர்த்தம்.

6. திருஆமாத்தூர்

பசுக்களுக்குத் தாயாக இறைவன் இருந்து அருளும் தலம். இங்கே, பசு என்றது உயிர்த்தொகுதியை.
    விழுப்புரம் தொடர்வண்டிநிலையத்திற்கு வடமேற்கில் 6.கி.மீ.தூரத்தில் பம்பையாற்றின் வடகரையிலுள்ளது. விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சூரப்பட்டு நகரப் பேருந்தில் திருவாமாத்தூர் செல்லலாம். இது நடுநாட்டுத் தலங்களுள் ஒன்று.
    இறைவரின் திருப்பெயர் அழகிய நாதர். இத்திருப்பெயரைத் திருக்குறுந்தொகையில் அப்பர்பெருமான் எடுத்து ஆண்டிருப்பது மகிழ்தற்கு உரியதாகும்.

           595 to 601 of 1902