| 2780. | அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் | | | அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணங் | | | கடிந்தானைக் கார்முகில்போற் கண்டத் தானைக் | | | கடுஞ்சினத்தோன் தன்னுடலை நேமி யாலே | | | தடிந்தானைத் தன்னொப் பாரில்லா தானைத் | | | தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் | | | படிந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் | | | பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 5 |
தோன்றிய விடத்தை உண்டு, தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய், மன்மதன் யமனுலகத்தை அடையுமாறு சிறிது நேரத்தில் அவன் உடலம் சாம்பலாகுமாறு தீத்தோன்ற விழித்தவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது. கு-ரை: 'வார்த் தாங்கு' என்பதில்தகரம் விரித்தல். வார் - கச்சு. வனம் (வன்னம்) -அழகு. "தென்றிசை" என்பது, காலன் ஊரைக் குறிக்கும் குறிப்பு மொழி. "திசைக்கே", 'திசைக்கண்ணே' என வேற்றுமை மயக்கம். பொடியா - சாம்பலாகும்படி. ஆங்கே - அப்பொழுதே; கண்ணுதற் கடவுளிடத்துக் காமன், மலரம்புகளை ஏவித் தன் செயலைச் செய்தமை உலகம் அறிந்ததாகலின், வாளா, "ஆங்கே" என்று அருளினார்; எனவே, 'அவன் அம்பெய்த அந் நொடியிலே' என்பது பொருளாயிற்று. பார்த்தான் - (நெற்றிக் கண்ணால் நோக்கினான்). 5. பொ-ரை: தன்னைச் சரணாக அடைந்த அடியவர்பால் பாவங்கள், துன்பங்கள், நோய்கள், பழைய தீவினைகள், வறுமை என்பன அணுகாதவாறு அவற்றைப் போக்கியவனாய், கார்முகில் போன்ற நீலகண்டனாய், மிக்க வெகுளியை உடைய சலந்தரனுடைய உடலைச் சக்கரத்தாலே அழித்தவனாய், ஒப்பற்றவனாய், மெய்ப்பொருளாய், உத்தமனாய், தன்னைத் தியானிக்கும் அடியவர் நெஞ்சில் ஊன்றியிருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது. கு-ரை: அடைந்தார் - தன்னை அடைக்கலமாக அடைந்தவர். அல்லல் நோய்கள் - துன்பத்தைத்தரும் பிணிகள். "பாவங்கள்" என்றது
|