| 2781. | கரந்தானைச் செஞ்சடைமேல் கங்கை வெள்ளங் | | | கனலாடு திருமேனிக் கமலத் தோன்தன் | | | சிரந்தாங்கு கையானைத் தேவ தேவைத் | | | திகழொளியைத் தன்னடியே சிந்தை செய்வார் | | | வருந்தாமைக் காப்பானை மண்ணாய் விண்ணாய் | | | மறிகடலாய் மால்விசும்பாய் மற்று மாகிப் | | | பரந்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் | | | பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 6 |
பிராரத்தத்தையும், "அருவினைகள்" என்றது சஞ்சிதத்தையும் நோக்கி என்க. நல்குரவு - வறுமை. 'அவர்பாற் செல்லா வண்ணம்' என உரைக்க. நேமி சக்கரம். 'நேமியால் தடிந்தான்' என்றதனால், "கடுஞ்சினத்தோன்" என்றது, 'சலந்தரனை' என்பது தெளிவு. "சலமுடைய சலந்தரன்றன் உடல் தடிந்தநல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடி" என்றருளியதும் (தி.8 திருவா. திருச்சாழல். 18), கந்தபுராணம் ததீசியுத்தரப் படலத்துள் சலந்தராசுரனைச் சிவபிரான் அழித்த வரலாற்றை விரித்துரைத்ததும் காண்க. படிந்தான்- ஊன்றியிருந்தான். 6. பொ-ரை: சிவந்த சடையின்மீது கங்கை வெள்ளத்தை மறைத்தவனாய், தீப்போன்ற சிவந்த தன் திருமேனிக்கண் பிரமனுடைய மண்டையோட்டினைச் சுமக்கும் கையை உடையவனாய், தேவர்களுக்குத் தலைமைத் தேவனாய், விளங்குகின்ற ஞானப்பிரகாசனாய், தன் திருவடிகளைத் தியானிப்பவர் வருந்தாத வகையில் அவரைக் காப்பவனாய், ஐம்பூதங்களாகி எங்கும் பரவியுள்ளவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத் தக்கது. கு-ரை: 'கங்கை வெள்ளம் செஞ்சடைமேல் கரந்தான்' என்க. "கனலாடு" என்றதில் ஆடு உவம உருபு. 'திருமேனிக்கண் கையானை' என இயையும்; 'உயர்ந்த திருவுருவில் இழிந்த தலையையும் தாங்கியுள்ளான்' என அவனது அருள் விளையாட்டை வியந்து அருளிச் செய்தவாறு. இவ்வாறன்றி, "கனலாடு திருமேனி" என்றதனை, கமலத்தோனுக்கு அடையாக்குதல் பொருந்தாமை அறிக. வருந்தாமை - துன்புறாதபடி.
|