பக்கம் எண் :

1036
 
2782.நதியாருஞ் சடையானை நல்லூ ரானை

நள்ளாற்றின் மேயானை நல்லத் தானை

மதுவாரும் பொழில்புடைசூழ் வாய்மூ ரானை

மறைக்காடு மேயானை ஆக்கூ ரானை

நிதியாளன் தோழனை நீடூ ரானை

நெய்த்தான மேயானை ஆரூ ரென்னும்

பதியானைப் பள்ளியின்முக் கூட லானைப்

பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

7

2783.நற்றவனை நான்மறைக ளாயி னானை

நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றுஞ்

செற்றவனைச் செஞ்சடைமேல் திங்கள் சூடுந்

திருவாரூர்த் திருமூலட் டானம் மேய

கொற்றவனைக் கூரரவம் பூண்டான் தன்னைக்

குறைந்தடைந்து தன்திறமே கொண்டார்க் கென்றும்

பற்றவனைப் பள்ளியின்முக் கூட லானைப்

பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

8


7. பொ-ரை: கங்கை தங்கிய சடையினனாய், குபேரனுக்குத் தோழனாய், நல்லூர், நள்ளாறு, நல்லம், தேன் ஒழுகும் பொழில்களால் சூழப்பட்ட வாய்மூர், மறைக்காடு, ஆக்கூர், நீடூர், நெய்த்தானம், ஆரூர் என்னும் திருத்தலங்களில் உறைபவன் ஆகிய பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்தசெயல் இரங்கத்தக்கது.

கு-ரை: நதி ஆரும் - கங்கை பொருந்திய. ஆரூர்போல, 'நல்லூர், நள்ளாறு, நல்லம், வாயமூர், மறைக்காடு (வேதாரணியம்), ஆக்கூர், நீடூர், நெய்த்தானம்' என்பனவும் சோழ நாட்டுத் தலங்கள். மது வாரும் - தேன் ஒழுகுகின்ற, நிதியாளன் - குபேரன்.

8. பொ-ரை: பெருந்தவத்தை உடையவனாய், நான்கு வேத வடிவினனாய், பெரியவனாய், பகைவர் மதில்கள் மூன்றையும் அழித்தவனாய், சிவந்த சடையின் மீது பிறையைச் சூடித் திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறையும் வெற்றியனாய், கொடிய பாம்புகளைப் பூண்டவனாய், தம் தேவையைக் கருதித்தன் தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்த