பக்கம் எண் :

1037
 
2784.ஊனவனை உடலவனை உயிரா னானை

உலகேழு மானானை உம்பர் கோவை

வானவனை மதிசூடும் வளவி யானை

மலைமகள்முன் வராகத்தின் பின்பே சென்ற

கானவனைக் கயிலாய மலையு ளானைக்

கலந்துருகி நைவார்தம் நெஞ்சி னுள்ளே

பானவனைப் பள்ளியின்முக் கூட லானைப்

பயிலாதே பாழேநான் உழன்ற வாறே.

9


அடியவர்களுக்கு என்றும் பற்றுக்கோடாக இருப்பவனாய், உள்ள பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.

கு-ரை: நற்றவன் - நல்ல தவக்கோலம் உடையவன். கொற்றவன் - தலைவன்; 'கொற்றம் (வெற்றி) உடையவன்' என்றே உரைத்தலுமாம். கூர் அரவம் -மிக்க பாம்புகள். தன் திறமே கொண்டார் - தனது தன்மையையே கடவுள் தன்மையாகத் துணிந்தவர்கள். பற்றவன் - துணையாய் இருப்பவன்.

9. பொ-ரை: ஊனாய், உடலாய், உயிராய், ஏழுலகமுமாய், தேவர்கள் தலைவனாய், பரமபதமாகிய வீட்டுலகில் இருப்பவனாய், பிறை சூடியாய், வளவி என்றதலத்தில் உறைபவனாய், பார்வதி காணப் பன்றியின் பின்போன வேடனாய், கயிலாய மலையில் உள்ளவனாய், ஒன்று பட்டு இளகி உருகும் அடியவருடைய நெஞ்சில், அப்பொழுது கறந்தபால் போல் இனியவனாய், பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது.

கு-ரை: ஊனவன் - தசை முதலியனவாய் உள்ளவன். உடலவன் - அத் தசை முதலியவற்றால் இயன்ற உடம்பாய் உள்ளவன். உயிர் ஆனான் - அவ்வுடலின் கண் உள்ள உயிராய் இருப்பவன். உலகு ஏழும் ஆனான் - அவ்வுயிர்கள் மாறிச் செல்லும் பல உலகங்களாய் இருப்பவன். "வானவன்" என்றது, பிறவிப் பெயர்; 'தேவராய் இருப்பவன்' என்பது பொருள்; இதனை, "உம்பர்கோ" என்றதற்கு முன்னர் வைத்து உரைக்க. உம்பர்கோ - தேவர்கட்குத் தலைவனாய் இருப்பவன். வளவியான்- 'வளவி' என்னும் தலத்தில் இருப்பவன்; இது வைப்புத் தலம். "மலைமகள் முன்' என்றது.