| 2785. | தடுத்தானைத் தான்முனிந்து தன்தோள் கொட்டித் | | | தடவரையை இருபதுதோள் தலையி னாலும் | | | எடுத்தானைத் தாள்விரலால் மாள வூன்றி | | | எழுநரம்பின் இசைபாடல் இனிது கேட்டுக் | | | கொடுத்தானைப் பேரோடுங் கூர்வாள் தன்னைக் | | | குரைகழலாற் கூற்றுவனை மாள அன்று | | | படுத்தானைப் பள்ளியின்முக் கூட லானைப் | | | பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 10 |
திருச்சிற்றம்பலம்
'அவள் காண' என்றவாறு: 'காண்டலால் அவன் வருத்தத்திற்கு அவள் வருந்துமாறு' என்பது திருக்குறிப்பு. வராகம் -பன்றி; இஃது அருச்சுனனை அழிக்க வந்தது. கானவன் - வேட்டுவன். கலந்து - ஒன்றுபட்டு. உருகி நைதல், ஒருபொருட் பன்மொழி; 'உருகி நினைவார்' என்பதும் பாடம் பானவன் - பருகப்படுபவனாய் உள்ளவன்; இது, 'பானம்' என்பது அடியாகப் பிறந்த பெயர். 'பால் நவன்' எனப் பிரித்து, 'நவமாய (புதிய - கறந்த) பால் போல்பவன்' என்றுரைத்தலுமாம். 10. பொ-ரை: தன்னைத் தடுத்த தேர்ப்பாகனை வெகுண்டு, தன் தோள்களைக் கொட்டிக் கயிலை மலையைப் பத்துத் தலைகளாலும் இருபது தோள்களாலும் பெயர்த்த தசக்கிரிவனைத் தன் கால் விரலால் நசுங்குமாறு அழுத்தி, அவன் நரம்பு ஒலியோடு இசைத்தபாடலை மகிழ்வோடு கேட்டு, இராவணன் என்ற பெயரையும், கூரிய வாளையும் கொடுத்தவனாய், கழல் ஒலிக்கும் திருவடியால் கூற்றுவன் மாளுமாறு ஒரு காலத்தில் உதைத்தவனாய், உள்ளபள்ளியில் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான் தடுமாறித் திரிந்தசெயல் இரங்கத்தக்கது. கு-ரை: இராவணனது செயலைத் தடுத்து அவனுக்கு அறிவுரை கூறினவன் அவன் அமைச்சன்; அவனை இராவணன் முனிந்தான் என்க. "தோள்" என்புழியும் உருபும் உம்மையும் விரிக்க. "மாள ஊன்றி" என்றது, ஊன்றியவாறே இருப்பின் அவன் மாளுதல் ஒருதலையாதல் பற்றி. "பேரோடும்" என்னும் உம்மை, எச்சம். 'வாள்தன்னைக் கொடுத்தானை' என்க. படுத்தான் -கொன்றான்.
|