பக்கம் எண் :

1039
 

70. பொது

பதிக வரலாறு:

சுவாமிகள், பாண்டிநாட்டு யாத்திரைசெய்து மீண்டும் திருப்புகலூர் அடைந்து பல வகையாலும் பணி செய்து தங்கியிருக்கும் நாள்களில் பாடியருளிய பல திருப்பதிகங்களுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12திருநாவு. புரா. 414)

குறிப்பு: சிவதலங்களை நினைத்தலும், அவைகளின் திருப்பெயரைச் சொல்லுதலுமே பெரும்பயன் தருவதாதல் பற்றி, இத் திருப்பதிகத்துள் அவைகளை எடுத்துத் தொகுத்தோதியருளினார். பாவநாசத் திருப்பதிகத்துள்(தி.4. ப.15.) தலங்களையே எடுத்தோதி யருளினமை காண்க. தலங்களைச் சென்று வழிபடும் மதுகையும், காதலும் இல்லாதார்க்கு இது போலும் திருப்பதிகங்கள் பெரிதும் பயன் தருவனவாமென்க.

'க்ஷேத்திரம்' என்னும் ஆரியச் சொல் திருப்பதிகங்களிலோ பிற திருமுறைகளிலோ ஓரிடத்தும் வாராமையின், அதனைத் திரிபும் இல்லாமல் சுவாமிகள் இங்கு அருளிச் செய்திரார் ஆதலின், 'சேத்திரக்கோவை' எனக் கொள்ளல் நலம். 'திருத்தலக்கோவை. திருப்பதிக் கோவை' என்றாற் போல்வனவே இதுபோலும் திருப்பதிகங்கட்குப் பெயராய் இருந்திருத்தல் வேண்டும். "மன்றுறைவார் வாழ்பதிகள் வழுத்து திருத்தாண்டகமும்" என்பதே சேக்கிழார் வாக்கும்.

க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 283

பதிக எண்: 70

திருச்சிற்றம்பலம்

2786.தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி

தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்

கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்

வீரட்டங் கோகரணங் கோடி காவும்


1. பொ-ரை: தில்லைச்சிற்றம்பலம், செம்பொன்பள்ளி, தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர், கொல்லி அறைப்பள்ளி, கோவல் வீரட்டம், கோகரணம், கோடிகா, முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி, முழையூர், பழையாறை, சத்தி முற்றம், குறிஞ்சி நிலத்தில்