| முல்லைப் புறவம் முருகன் பூண்டி | | | முழையூர் பழையாறை சத்தி முற்றங் | | | கல்லில் திகழ்சீரார் காளத்தியுங் | | | கயிலாய நாதனையே காண லாமே. | 1 |
திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம். கு-ரை: சிற்றம்பலம், தில்லைக்கோயிலில் கூத்தப் பெருமான் நடனம் புரியும் இடம்; இது மிகச் சிறப்புடைத்தாதல் பற்றி இப்பெயர் அத்திருக்கோயில் முழுவதையும் குறித்தல் உண்டு. சிறுமை+ அம்பலம் = சிற்றம்பலம். சிறுமை - நுண்மை; அஃதாவது இறைவனது அருளாற்றல். அம்பலம் - வெளி. எனவே, 'சிற்றம்பலம்' என்பது, 'அருள்வெளி' என்பதாம். திருமுறைகளைத் தொடங்கும் பொழுதும், 'திருச்சிற்றம்பலம்' எனத் தொடங்கி, முடிக்கும் பொழுதும், 'திருச்சிற்றம்பலம்' என முடித்தற்கும் இதுவே காரணம்; அஃதாவது, அவை அருள் வெளியினின்றும் தோன்றிய அருள் நாத ஒலிகளாய் இருத்தலே காரணம்என்க. தேவாரத் திருப்பதிகங்கள் தில்லையில் சேமிக்கப்பட்டதும் இதுபற்றியே என உணர்க, இறைவனது அருளாற்றல் அறிவேவடிவாய் இருத்தல்பற்றி, 'சிற்றம்பலம்' என்பது, வடமொழியில், 'சிதம்பரம்' எனப்படும். சித் - அறிவு; அம்பரம் - ஆகாசம்; வெளி. இதனை, "சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலம்" (தி.12 தில்லைவாழ் அந்.புரா. 2.) என விளக்கியருளினார், சேக்கிழார் நாயனார். பர வியோமம் - மேலான வெளி. இனி, உபநிடதங்களில்தகர வித்தை கூறும் இடங்களில் வரும், 'தகராகாசம்' என்பதில், 'தகரம்' என்பதற் கும், 'சிறுமை' என்பதே பொருள். இறைவனுக்கு உண்மையில் இடமாவது அவனது அருள் வெளியே. அதனால், உயிர்கள் பொருட்டு அவன்பற்பல திரு உருவங்களைத் தனது திருமேனியாகக் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருக்கோயில்களும் அவனது அருட்டிருமேனிகளை நினைக்கும் நெஞ்சகமும், 'சிற்றம்பலம்' எனக் கூறுதற்கு உரியனவாம். ஆயினும் அவற்றுள்ளும், இறைவன் உலகில் உருவத் திருமேனி கொண்டு உலகம் முழுவதையும் இயக்குவதாகிய ஐந் தொழில் (பஞ்சகிருத்திய) நடனத்தை இயற்றி நிற்கும் இடமும், அறிவுடைப் பொருளாகிய உயிரோடு ஒற்றுமைப்பட்டு அதன் அறிவை விளக்கி நின்று உதவும் நெஞ்சகமுமே சிறப்பாக, 'சிற்றம் பலம்' எனப்படுகின்றன. எனினும், இறைவன் உலகில் நடனக் கோலங் கொண்டு விளங்கும் இடங்களில் தில்லையே முதன்மையுடைத்து என்பது வரலாற்று முறையான் வருதல் பற்றி,
|