பக்கம் எண் :

1052
 
2798. காவிரியின் கரைக்கண்டி வீரட்டானங்

கடவூர்வீரட்டானங் காமருசீ ரதிகை

மேவியவீ ரட்டானம் வழுவைவீ ரட்டம்

வியன்பறியல் வீரட்டம் விடையூர்திக் கிடமாம்

கோவில்நகர் வீரட்டங் குறுக்கைவீ ரட்டங்

கோத்திட்டைக் குடிவீரட் டானமிவை கூறி

நாவில்நவின் றுரைப்பார்க்கு நணுகச் சென்றால்

நமன்தமருஞ் சிவன்தமரென் றகல்வர் நன்கே.

2.

பிளந்தானது அழகிய சக்கரப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி, மது நிறைந்து மலர்கள் மணம் கமழும் கொல்லியறைப்பள்ளி, மயில்கள் ஆடும் சாரலினை உடைய சிராப்பள்ளி, சிவப்பள்ளி, செம்பொன் பள்ளி, செழிப்புமிக்க நனிபள்ளி, தவப்பள்ளிபுகழ் பொருந்திய பரப்பள்ளி என்று இத்தலப்பெயர்களைப் பலகாலும் சொல்லுவார் எல்லாரும் மேலான தேவருலகை அடைந்து அதனை இனிமைமிகக் காப்பாராவார்.

கு-ரை: இத்திருத்தாண்டகம், 'பள்ளி' எனவருவனவற்றை வகுத்தருளிச்செய்தது.

சக்கரப்பள்ளி, நனிபள்ளி சோழநாட்டுத்தலங்கள். காட்டுப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, கொல்லியறைப் பள்ளி மேலைத் திருப்பதிகத்துட் கூறப்பட்டன. 'சிராப் பள்ளி' என்பது எதுகை நோக்கிக்குறுகிற்று.

பொருப் பள்ளி, சிவப் பள்ளி, தவப் பள்ளி, பரப்பள்ளி இவை வைப்புத் தலங்கள்.

வரை - மலை. புலந்து அழிய - பகைத்து அழிய. பொன் - அழகு. கள் ஆர் - தேன் நிறைந்த. 'கலவச்சாரல்' என்பது மெலித்தலாயிற்று. கலவம் - மயில். "பரலோகத்து" என்புழி, இரண்டனுருபு தொகுத்தலாயிற்று. பாலிப்பார் - காப்பார்; ஆளுவார்.

2. பொ-ரை: காவிரியின் கரையிலுள்ள கண்டியூர் வீரட்டானம், கடவூர் வீரட்டானம், விரும்பத்தக்க புகழினை உடைய அதிகை வீரட்டானம், வழுவூர் வீரட்டானம், பரப்பு மிக்க பறியலூர் வீரட்டானம், இடபத்தை ஊர்தியாக உடைய சிவபெருமானுக்குரிய இடமாகிய கோவலூர் வீரட்டானம், குறுக்கை வீரட்டானம், தலைமையும் மேன்மையுமுடையவிற்குடி வீரட்டானம் என்னும்