பக்கம் எண் :

1051
 

71. பொது

பதிக வரலாறு:

திருவையாற்றில் கயிலைக் காட்சிகண்ட சுவாமிகள் திருநெய்த்தானம், திருமழபாடி முதலியதலங்களைப் பணிந்து, திருப்பூந்துருத்தி சேர்ந்து, பெருமானைப் பரிவோடு வணங்கி இருப்போந்திருவடிக்கீழ்நாம் என்னும் திருக்குறுந்தொகை முதலிய பல பதிகங்கள் அருளிச்செய்து திங்களும் ஞாயிறுற் தோயுந் திருமடம் அமைத்துத் திருத்தொண்டு செய்திருக்கும் நாள்களில் பாடியருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம். (தி.12 திருநாவு.புரா. 390)

குறிப்பு: இத்திருப்பதிகம், மேலைத்திருப்பதிகத்துள் ஓதியருளியனவும், பிறவுமாகிய தலங்களைப் பெயர் ஒற்றுமையால் வகைப்படுத்து அருளிச்செய்தது, அப்பெயர்கள் தாம்சத்தகோடி மகாமந்திரங்கள் போல ஒருபெற்றியனவான பல்வேறு முடிபுடையனவாய் இயைந்து, ஓதுவார் உள்ளத்தில் எளிதிற் பொருந்தி நின்று பயன் தருமாகலின். சுவாமிகளும் இதனுள் பெரும்பாலும் அத்தலப் பெயர்களைச் சொல்லுதலையே வலியுறுத்தியருளினார். 'அடைவு, முறைமை' என்பன ஒரு பொருட் சொற்கள். முறைமையாவது ஒரு தன்மைப்பட்ட பொருள்கள் தொடர்ந்து வருதல்.

அடைவுத் திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 284

பதிக எண்: 71

திருச்சிற்றம்பலம்

2797.பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து

புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்

கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்

கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்

சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி

செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்

பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்

பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே.

1


1. பொ-ரை: மேருவை வில்லாகக்கொண்டு திரிபுரங்களை அம்பால் எய்தானது பொருப்பள்ளி, வருந்தி அழியுமாறு சலந்தரனைச் சக்கரத்தால்