பக்கம் எண் :

1054
 
2799.நற்கொடிமேல் விடையுயர்த்த நம்பன் செம்பங்

குடிநல்லக் குடிநளிநாட் டியத்தான் குடி

கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி

கருந்திட்டைக் குடிகடையக் குடிகா ணுங்கால்

விற்குடிவேள் விக்குடி நல்வேட்டக் குடி

வேதிகுடி மாணிகுடி விடைவாய்க் குடி

புற்குடிமா குடிதேவன் குடிநீலக்குடி

புதுக்குடியும் போற்றஇடர் போகு மன்றே.

3


உளதாகும்" என்னும் பொருளதாய், "உரைப்பார்க்கு" என்னும் நான்காவதற்கு முடிபாயிற்று. இனி, 'உரைப்பாரை' என உருபுமயக்கமாக்கி உரைத்தலுமாம்.

3. பொ-ரை: நல்ல இடபக்கொடியை மேலே உயரத்தூக்கியவனும், நம்புதற்குரியவனுமாகிய சிவபெருமானுடைய செம்பங்குடி, நல்லக்குடி, பெருமைமிக்க நாட்டியத்தான்குடி, கற்குடி, இனிய களக்குடி, செங்காட்டங்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி ஆகியவற்றோடு ஆராயுங்கால் குடியில் முடியும் ஊர்களாகிய விற்குடி, வேள்விக்குடி, நன்மமைமிகு வேட்டக்குடி, வேதிகுடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி,, தேவன்குடி, நீலக்குடி, புதுக்குடி, என்பனவற்றையும் புகழ்ந்து கூறத் துன்பம் நீங்கும்.

கு-ரை: இத்திருத்தாண்டகம், 'குடி' என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது.

நாட்டியத்தான் குடி, செங்காட்டங்குடி,வேட்டக்குடி, நீலக்குடி இவை சோழநாட்டுத் தலங்கள். வேள்விக்குடி, கற்குடி, வேதிகுடி, தேவன்குடி இவை மேலைத்திருப்பதிகத்திற் சொல்லப் பட்டன. விற்குடியை, 'வீரட்டம்' என்பது நோக்கி மேலைத் திருத்தாண்டகத் துள்ளும், 'குடி' என்பது நோக்கி இத்திருதாண்டகத்துள்ளும் அருளிச்செய்தார்.

செம்பங்குடி, நல்லக்குடி, தென்களக்குடி, கருந்திட்டைக்குடி, கடையக்குடி, மாணிகுடி, விடைவாய்க்குடி, புற்குடி, மாகுடி, புதுக்குடி இவை வைப்புத் தலங்கள். 'விடைவாய் திருப்பதிகம்' என ஒரு திருப்பதிகம், கல்வெட்டிலிருந்து மிக அண்மையில் கிடைத்து, சென்னை சைவசித்தாந்தசமாசத்தினரால் பதிப்பிக்கப் பெற்றது. அத்தலம், விடைவாய்க்குடியே போலும்.