| 2800. | பிறையூருஞ் சடைமுடியெம் பெருமா னாரூர் | | | பெரும்பற்றப் புலியூரும் பேரா வூரும் | | | நறையூரும் நல்லூரும் நல்லாற் றூரும் | | | நாலூருஞ் சேற்றூரும் நாரை யூரும் | | | உறையூரும் ஓத்தூரும் ஊற்றத் தூரும் | | | அளப்பூரோ மாம்புலியூ ரொற்றி யூரும் | | | துறையூருந் துவையூருந் தோழூர் தானுந் | | | துடையூருந் தொழஇடர்கள் தொடரா வன்றே. | 4 |
| 2801. | பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும் | | | பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங் | | | கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில் | | | கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில் | |
4. பொ-ரை: பிறை தவழும் சடைமுடிச் சிவபெருமானுடைய ஆரூர், பெரும் பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம்புலியூர், ஒற்றியூர், துறையூர், துவையூர், தோழூர், துடையூர், என்னுமிவற்றைத் தொழத் துன்பங்கள் தொடர மாட்டா. கு-ரை: இத்திருத்தாண்டகம், 'ஊர்' என வருவனவற்றை வகுத்தருளிச் செய்தது. நல்லாற்றூர், நாலூர், சேற்றூர், துவையூர், துடையூர் இவை வைப்புத் தலங்கள். ஆரூர், பெரும்பற்றப்புலியூர், பேராவூர், நறையூர், நல்லூர், நாரையூர், உறையூர், ஓத்தூர், ஊற்றத்தூர், அளப்பூர், ஓமாம் புலியூர், ஒற்றியூர், துறையூர், தோழூர் இவை மேலைத் திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன. பெரும்பற்றப்புலியூர் - தில்லை. பிறை ஊரும் சடை முடி- பிறை தவழ்கின்ற சடைமுடி. 5. பொ-ரை: நீர்ப்பெருக்கினைஉடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான்திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர்கரக் கோயில், மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்தஞாழற் கோயில், கருப்பறியலூரில் மலை போன்று விளங்கும் கொகுடிக்கோயில், அந்தணர்கள்
|