பக்கம் எண் :

1065
 

73. திருவலஞ்சுழியும்

திருக்கொட்டையூர்க் கோடீச்சரமும்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவாரூர் தொழநினைந்து நல்லூரில் நம்பர் அருள் பெற்றுப் பழையாறை முதலாகப் பல தலங்களைப் பணிந்து திருவலஞ்சுழி தொழுது கொட்டையூர்க் கோடீச்சரத்தையும் இணைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம்.(தி.12 திருநாவு. புரா. 215)

குறிப்பு: இத் திருப்பதிகமும், மேல் வந்த சில திருப்பதிகங்கள் போல 'கண்டாய்' என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவன் இயல்பினை வகுத்தருளிச் செய்தது.

இது 'திருவலஞ்சுழி திருக்கொட்டையூர்க் கோடீச்சரம்' என்னும் இருதலங்கட்கு உரியதாகவும், திருக்கொட்டையூர்க் கோடீச்சரம் ஒன்றற்கே உரியதாகவும் பதிப்புக்களிற் காணப்படுகின்றது. எல்லாத் திருத்தாண்டகங்களிலும் திருவலஞ்சுழித் தலம் ஒன்றே தவறாது உடன் குறிக்கப்படுதலின், அவ்விருதலங்கட்கும் உரியதாகக் கொள்ளுதலே பொருந்துவதாகும். இவ்விரு தலங்களும் தொடர்புடையன என்பது புராணத்தார்க்கும் கொள்கை; அஃதாவது, 'பிலத்துட் சென்று மறைந்த காவிரியாறு, கொட்டையூரில் தவம் செய்திருந்த, 'ஏரண்டர்' என்னும் முனிவராலே வலஞ்சுழியில் மேலெழுந்துபெருகிற்று' என்பது.

திருத்தாண்டகம்

ப. தொ. எண்: 286

பதிக எண்: 73

திருச்சிற்றம்பலம்

2809.கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய்

கல்லால் நிழற்கீ ழிருந்தான் கண்டாய்

பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்

பவளக்குன் றன்ன பரமன் கண்டாய்


1. பொ-ரை: நிறம் வாய்ந்த மணிபோன்ற அழகுடையவனும், கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும், தலைவனுமாகிய சிவபெருமான் நீலமணி போற்றிகழும் கழுத்தால் அழகு மிக்கவனும் கல்லால மரநிழலில்