| வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய் | | | மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் | | | குருமணி போல் அழகமருங் கொட்டையூரிற் | | | கோடீச் சரத்துறையுங் கோமான் தானே. | 1 |
| 2810. | கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய் | | | கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய் | | | அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய் | | | அண்ட கபாலத்தப் பாலான் கண்டாய் | | | மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி | | | வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய் | | | குலைத்தெங்கஞ் சோலைசூழ் கொட்டையூரிற் | | | கோடீச்ச ரத்துறையுங் கோமான் தானே. | 2 |
இருந்தவனும், பருத்த மணிகளை உடைய பெரியபாம்பினை அணியாகப் பூண்டவனும், பவளக்குன்று போல் காட்சியளிக்கும் மேலோனும், தெளிந்த நீர் ஒடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும், தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும், யாவர்க்கும் வரமருளும் வரதனும் ஆவான். கு-ரை: கருமணி - நீலமணி. பருமணி- பருத்த (பெரிய மாணிக்கம். மணிநீர் - அழகிய நீர். மாதேவன் - (தேவர்கட்கெல்லாம்) பெரிய தேவன்.வரதன் - வரத்தைக் கொடுப்பவன். குருமணி - நிறம்வாய்ந்த மணி. 'அழகமருங் கோமான், கோடீச்சரத்துறையுங் கோமான்' எனத் தனித்தனி முடிக்க. 'கோடீச்சரம்' என்பது, திருக்கோயிலின் பெயர். 2. பொ-ரை: குலைகளை உடைய தெங்குகள் நிறைந்த சோலையால் சூழப்பட்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவன் ஆகிய சிவபெருமான்மான் கன்றை ஏந்திய கரத்தனும், கலைகளைப் பயில்வோருக்குஞானக் கண்ணாய் விளங்குபவனும், அலைகள் பொருந்திய கங்கையாற்றைத் தன்செஞ்சடையில் ஏற்றவனும், அண்டச்சுவரின் உச்சிக்கும் அப்பாலவனும், மலைபடுபொருள்களை அடித்துக் கொண்டு வரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து மேவிய மைந்தனும் ஆவான்.
|