77. திருவாய்மூர் பதிக வரலாறு: ஆளுடைய அரசர் ஆளுடைய பிள்ளையாருடன் திருமறைக்காடு சென்று மறைக்கதவம் திறக்கவும் அடைக்கவும் பாடித்தொழுது திருமடம் சென்று தாம்பாட அரிதின் கதவம் திறந்தமையும், சம்பந்தர்பாட எளிதில் கதவம் அடைத்தமையும் கருதி நம்பர் திருவுள்ளம் அறியாது அயர்த்தேன் எனக்கவன்று பேழ்கணித்துத்துயின்றார். 'திருவாய்மூரில் இருப்போம் தொடரவா" எனப்பெருமான் கனவில் அருளினான். வாகீசர் கனவிற் கேட்டவாறே தொடர்ந்து செல்பொழுதில் அண்மையில் காட்சி கொடுப்பான் போல எதிரே கோயிலொன்றுகாட்டிப் பெருமான் மறைந்தருளினான். புகலி வள்ளலாரும் வாகீசர் போந்தபடிகேட்டு வந்தணைந்தார். கதவம் அடைக்கப் பாடிய ஆளுடைய பிள்ளையார் உப்பாலார், தாம் இங்கு எப்பால் மறைவது என்று அரசர் பாடியருள இறைவன்காட்சி வழங்குவதை ஆளுடைய பிள்ளையார் காட்டக் கண்டு பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.12 திருநாவு. புரா. 281) குறிப்பு: இத்திருப்பதிகம் சுவாமிகள் சிவபிரானது இயற்கைக் கோலத்தைக் கண்டு அங்ஙனங் கண்ட காட்சியையே எடுத்தோதி அருளியதாகலின். சிவபிரானது கோலங்களைப்பற்றி வரும் உரையளவைகட்கெல்லாம் இது பேரனுபவத் திருமொழியாகும். திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 290 | பதிக எண்: 77 |
திருச்சிற்றம்பலம் | 2850. | பாட அடியார் பரவக் கண்டேன் | | | பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம் | | | ஆடல் முழவம் அதிரக் கண்டேன் | | | அங்கை அனல்கண்டேன் கங்கை யாளைக் | |
1. பொ-ரை: அடியார்கள் பாடிப்பரவவும் பத்தர்கணம் சூழ்ந்து நிற்கவும் பூதங்கள் நெருங்கவும் ஆடற்கேற்ற முழவம் முழங்கவும் அமைந்த சூழலில் அழகிய கையில் அனல் ஏந்தியவரும், காந்தட்பூவும், பாம்பும் பொருந்திய சடையில் கங்கையைத் தரித்தவரும், கொக்கிறகைச் சூடியவரும்,
|