| கோட லரவார் சடையிற் கண்டேன் | | | கொக்கி னிதழ்கண்டேன் கொன்றை கண்டேன் | | | வாடல் தலையொன்று கையிற் கண்டேன் | | | வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே. | 1 |
| 2851. | பாலின் மொழியாளோர் பாகங் கண்டேன் | | | பதினெண் கணமும் பயிலக் கண்டேன் | | | நீல நிறமுண்ட கண்டங் கண்டேன் | | | நெற்றி நுதல்கண்டேன் பெற்றங் கண்டேன் | | | காலைக் கதிர்செய் மதியங் கண்டேன் | | | கரந்தை திருமுடிமேல் தோன்றக் கண்டேன் | | | மாலைச் சடையும் முடியுங் கண்டேன் | | | வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே. | 2 |
கொன்றைமாலையை அணிந்தவரும், உலர்ந்த தலையோட்டினைக் கையில் கொண்டவரும் ஆக வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன். கு-ரை: "பாட, பரவ" முதலிய செயவெனெச்சங்கள் தொழிற் பெயர்த்தன்மையனவாய் நின்று, "கண்டேன்" என்பதற்குச் செயப்படு பொருளாயின. 'அடியார்' பாடவும் பரவவும் கண்டேன்' என்க. 'பத்தர்கணங்கண்டேன்' என்பதனை முதற்கண் வைத்து, "அடியார்" என்றதனைச் சுட்டளவாகக் கொள்க. கணம் - கூட்டம். மொய்த்த - நெருங்கிய. 'பூதமும் அதிர்தலும் கண்டேன்' என்க. ஆடல் முழவம் - நடனத்தில் முழக்கப்படும் மத்தளம். முழவம் அதிர்தலை, "கண்டேன்" என்றது. 'நேர்பட அறிந்தேன்' என்றபடி, இவ்வாறு மேலும் உரைக்க வேண்டுமிடம் அறிந்துகொள்க. கோடல் -காந்தட் பூ; 'கோடலும் அரவும் பொருந்திய சடை' என்க. "இதழ்" என்றது, சிறகினை. வாடல்தலை - உலர்ந்த தலை ஓடு; "வற்றல் ஓடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளம் கவர்கள்வன்" (தி.1. ப.1. பா.2.) என்றருளிச் செய்தார், திருஞான சம்பந்த சுவாமிகளும், 'வாய்மூர் அடிகளை நான் கண்டவாறு இது' எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. 2. பொ-ரை:பால்போன்று இனிக்கும் மொழியாளாகிய பார்வதி ஒரு பங்காகத்திகழப் பெற்றவரும், பதினெண் கணத்தேவரும் சூழ்ந்து பணி செய்யக்
|