பக்கம் எண் :

1114
 
2852.மண்ணைத் திகழ நடம தாடும்

வரைசிலம் பார்க்கின்ற பாதங் கண்டேன்

விண்ணிற் றிகழும் முடியுங் கண்டேன்

வேடம் பலவாஞ் சரிதை கண்டேன்


கொண்டவரும், நீலகண்டரும், நெற்றிக் கண்ணரும், பெற்றமூர்பவரும், ஒளிஉமிழும் இளமதியைத் தரித்தவரும், திருமுடி மேல் கரந்தை மலரைச்சூடியவரும், மாலை அணிந்த சடையாலான முடியை உடையவரும் ஆக வாய்மூர் அடிகளை நான்கண்டேன்.

கு-ரை: பதினெண் கணம் - பதினெட்டுக் கூட்டம்; இக்கூட்டத்தினர் அனைவரும் தேவஇனத்தவர்; அவர் இன்னர் என்பதனை, "பதினெண்கணங்களாவார், 1. தேவரும், 2. அசுரரும், 3. முனிவரும், 4. கின்னரரும், 5. கிம்புருடரும், 6. கருடரும், 7. இயக்கரும், 8. இராக்கதரும், 9. கந்தருவரும், 10. சித்தரும், 11. சாரணரும், 12. வித்தியாதரரும், 13. நாகரும், 14. பூதரும், 15. வேதாளமும், 16. தாராகணமும், 17. ஆகாசவாசிகளும், 18. போகபூமியோரும் என இவர்" என்னும் புறநானூற்றுக்கடவுள் வாழ்த்தின் உரையாலும்,

"விரவுசா ரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர்
கருடர்கின் னரர்இயக்கர் காந்தர்வர் சுரர்த யித்தியர்
உரகர்ஆ காச வாசர்உத்தர குருவோர் யோகர்
நிருதர்கிம் புருடர் விண்மீன் நிறைகணம் மூவா றாமே"

எனும் சூடாமணிநிகண்டுப் பாவாலும், பிறவாற்றாலும் அறிக.

(விஞ்சையர் - வித்தியாதரர், பாசாசர் - வேதாளர். சுரர் -தேவர். தயித்தியர் - அசுரர். உரகர் - நாகர். உத்தரகுருவோர் - போகபூமியர். யோகர் - முனிவர். நிருதர் - இராக்கதர்.)

பயிலுதல் - சூழ்ந்து பணிசெய்தல். உண்ட - ஏற்றுக்கொண்ட. 'நெற்றிவிழி' என்பதும், 'சடையின் முடியும்' என்பதுமே பாடமாதல் வேண்டும். பெற்றம் - பசு; இடபம். காலை - இளமை. 'காலை மதியம்' என்க. கரந்தை ஒருவகைப்பூ. மாலை - கொன்றை மாலை.

3. பொ-ரை: நிலவுலகம் நின்று நிலைக்க நிகழ்த்தும் கூத்தாட்டில் கட்டப்பட்ட சிலம்பு ஒலிக்கின்ற பாதங்களை உடையவராய், விண்ணிற் சென்று விளங்கும் முடியினராய், ஏற்கும் பலவகை வேடங்கட்கும் பொருந்திய