பக்கம் எண் :

1115
 
நண்ணிப் பிரியா மழுவுங் கண்டேன்

நாலு மறையங்கம் ஓதக் கண்டேன்

வண்ணம் பொலிந்திலங்கு கோலங் கண்டேன்

வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

3

2853.விளைத்த பெரும்பத்தி கூர நின்று

மெய்யடியார் தம்மை விரும்பக் கண்டேன்

இளைக்குங் கதநாக மேனி கண்டேன்

என்பின் கலந்திகழ்ந்து தோன்றக் கண்டேன்

திளைக்குந் திருமார்பில் நீறு கண்டேன்

சேணார் மதில்மூன்றும் பொன்ற அன்று

வளைத்த வரிசிலையுங் கையிற் கண்டேன்

வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே.

4


செயல்களைச் செய்பவராய், பிரியாது விளங்கும் மழுவினராய், நான்கு மறைகளையும் ஆறு அங்கங்களையும் ஓதுபவராய், பலவகை நிறங்களும் அழகுபெறத்திகழும் தோற்றத்தினராய்த் திருவாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.

கு-ரை: "மண்ணை என்னும் ஐகாரம் சாரியை. வரை - ஏற்றுக் கொண்ட; அணிந்த. விண்ணின் - செவ்வானத்தைப் போல; 'வானை அளாவி விளங்கும்' என்றுமாம். சரிதை - செயல்கள். 'பலவாய வேடங்கட்கும் ஏற்ற செயல்கள்' என்க. வண்ணம் -(பலவகை) நிறம்; 'வண்ணப் பொலிந்திலங்கு கோலம்' என்பது பாடமாயின், 'வண்ணக் கோலம்' என இயைத்து உரைக்க.

4. பொ-ரை:முன்னைத் தவம் விளைத்த பத்தி மிக நின்று உண்மை அடியார்கள் தம்மை விரும்புமாறு திகழ்பவராய், கருடனுக்கு அஞ்சுவனவும் இயல்பாகக் கோபம்மிக்கனவும் ஆகிய நாகங்களை அணிந்து விளங்கும் மேனியராய், எலும்பாலான அணிகலன்களைப் பூண்டு திகழுபவராய், திருநீற்றில் மூழ்கும் திருமார்பினராய், வானிடத்து மதில்கள் மூன்றும் அன்று அழியுமாறு வளைத்தவரிந்து கட்டப்பட்ட சிலையைக் கையில் கொண்டவராய் வாய்மூர்ச் சிவபெருமானை நான் கண்டேன்.

கு-ரை: விளைத்த - முன்னைத் தவத்தினால் விளைவிக்கப்பட்ட.