பக்கம் எண் :

1200
 
கையினார் அம்பெரிகால் ஈர்க்குக் கோலாக்

கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த

செய்யினார் தென்பரம்பைக் குடியின் மேய

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.

9

* * * * * *  10

திருச்சிற்றம்பலம்


அணிகின்ற நாகமே நாணாகவும், மலையே வில்லாகவும், அக்கினிதேவனும் வாயுதேவனும் கையிற் பொருந்திய அம்பினுடைய ஈர்க்கும் கோலுமாகக் கொண்டு கொடிய தவத்தைச் செய்து வரங்களைப் பெற்ற அசுரர்களுடைய நெடிய புரங்கள் மூன்றையும் நெருப்பில் வீழ்த்தவனும், வயல்கள் நிரம்பிய தென்பரம்பைக் குடியைச் சார்ந்த திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக.

கு-ரை: கையில் உண்டு உழல்வார், சமணர். சாக்கியர் - புத்தர், 'உழல்வாரும் சாக்கியரும் ஆகிய கல்லாதார்' என்க; மெய்ந்நூல்களைக் கல்லாமையின், அவர் கல்லாதவராயினர். அல்லாதான் - நல்லனல்லா தான். பொய் - கரவு. 'கரவு இல்லாதவர்க்குக் கரவாது வெளிநின்று அருளுபவன்' என்றபடி. 'பூணுகின்ற நாகமே நாணாகவும்" பொருப்பே (மலையே) வில்லாகவும் எரியும் (அக்கினி தேவனும்) காலுமே (வாயு தேவனுமே) கையிற் பொருந்திய அம்பினது ஈர்க்கும் கோலுமாகவும் கொண்டு புரங்களை வீழ்த்திய திருவாலம் பொழிலான், என்க. "பூண் நாகமே நாணாக" என்றது, இனம் நோக்கி. "ஈர்க்குக் கோல்" என்றதனை, "எரிகால்" என்பவற்றோடு எதிர் நிரனிறையாக இயைக்க. "கோல்" என்றது, கூர்மையை. ஈர்க்கு - சிறகு. கடுந்தவம் - மிக்க தவம். திரிபுரத்தவர் மிக்க தவம் செய்தே அவைகளைப் பெற்றமை யறிக. நெடும் புரம் - பெரிய ஊர்; அரண். செய்யின் ஆர் - வயல்களால் நிரம்பிய.

10. * * * * * * * *

இத் திருப்பதிகத்திற் கிடைத்த திருத்தாண்டகங்கள் இவ்வளவே.