| 2944. |
ஐந்தலைய நாகவணைக் கிடந்த மாலோ | | |
டயன்தேடி நாடரிய அம்மான் தன்னைப் | | |
பந்தணவு மெல்விரலாள் பாகத் தானைப் | | |
பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான் தன்னைப் | | |
பொந்துடைய வெண்டலையிற் பலிகொள் வானைப் | | |
பூவணமும் புறம்பயமும் பொருந்தி னானைச் | | |
சிந்திய வெந் தீவினைகள் தீர்ப்பான் தன்னைத் | | |
திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. |
8 |
| 2945. | கையிலுண் டுழல்வாருஞ்
சாக்கியருங் | | |
கல்லாத வன்மூடர்க் கல்லா தானைப் | |
| பொய்யிலா
தவர்க்கென்றும் பொய்யி லானைப் | |
| பூண்நாகம் நாணாகப் பொருப்பு
வில்லாக் | |
சொல்லாதார் - வாழ்த்தாதவர். "சொல்லாதான்" என்றது, 'நினையாதவன்' எனத் தன்
காரணந் தோற்றி நின்றது. செல்லாத நெறி - செல்லுதற்கு அரிய நெறி; ஞான நெறி;
'அழியாத நெறி' என்றும் ஆம்.
8. பொ-ரை: ஐந்தலைப் பாம்பாகிய படுக்கையில் கிடந்த திருமாலும் பிரமனும் தேடிக் காண இயலாத தலைவனும், பந்து பொருந்தும் மெல்லிய விரலினளாகிய பார்வதியைப் பாகமாகக் கொண்டவனும், பராய்த்துறையிலும், வெண்காட்டிலும் பயின்று நிற்பவனும், ஓட்டைகளுடைய வெள்ளிய தலையில் பிச்சை ஏற்பவனும், பூவணத்தும் புறம்பயத்தும் பொருந்தி நிற்பவனும், துன்புறுத்திய எம் கொடுவினைகளைத் தீர்ப்பவனும் ஆகிய திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக. கு-ரை: பராய்த்துறை, வெண்காடு, புறம்பயம் இவை சோழ நாட்டுத் தலங்கள். பூவணம், பாண்டி நாட்டுத் தலம். பொந்து - புழை. சிந்திய - சிதறிக் கிடந்த; என்றது, 'பல பிறப்புக்களில் பல இடங்களில் செய்யப்பட்டுக் கிடந்த' என்றவாறு; இனி, 'சிந்திய - துன்புறுத்திய' என்றுமாம். 'சிந்திய வெந்தீவினைகள் தீரநின்ற' என்பதும் பாடம். 9. பொ-ரை: கையில் உணவை ஏற்று உண்ணும் சமணரும் சாக்கியரும் ஆகிய கல்விப்பயனடையாத வலிய மூடர்க்கு நல்லன் அல்லனும், நெஞ்சில் கரவு இல்லாதார்க்குக் கரவாது வெளிநின்று அருள்பவனும், பூணாக
|