| 2943. | பொல்லாத என்னழுக்கிற் புகுவா னென்னைப் | | | புறம்புறமே சோதித்த புனிதன் தன்னை | | | எல்லாருந் தன்னை யிகழ அந்நாள் | | | இடுபலியென் றகந்திரியும் எம்பி ரானைச் | | | சொல்லாதா ரவர்தம்மைச் சொல்லா தானைத் | | | தொடர்ந்துதன் பொன்னடியே பேணு வாரைச் | | | செல்லாத நெறிசெலுத்த வல்லான் தன்னைத் | | | திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே. | 7 |
(தி.2. ப.30. பா.3.) என்றது மேலும் காட்டப்பட்டது. "பிறப்பு இறப்பு" என்றதும், தோற்ற ஒடுக்கங்களை; அவற்றிற்கு நிமித்தமாய் நிற்பவனை அவையேயாக அருளிச் செய்தார். 'வேறா(க) அரிந்தானை' என்க. பரிந்தான் - அருள் கூர்ந்தான். 'சிலையாக மலையில் நாண் ஏற்றி' என்க. சிலை - வில். 7. பொ-ரை: குற்றமிக்க என்னுடம்பில் புகுதற்பொருட்டு என் உடம்பின் புறத்தே நின்று பலகாலும் ஆராய்ந்து குற்றங்களைந்து தூய்மை செய்த புனிதனும், தாருகாவனத்து முனிவர் எல்லாரும் தன்னை இகழ, அந்நாள் அவரகத்தார் இடுபலி என்ற ஒன்றை முன்னிட்டுக் கொண்டு அங்கே திரிந்தவனும், தன்னைப் புகழாதாரைத் தான் என்றும் நினையாதவனும், இடைவிடாமல் தன் பொன்னடிகளையே விரும்பி ஒழுகுவாரை மற்றவர் செல்லாத ஞான நெறியிலே செலுத்த வல்லவனும் ஆகும் திருவாலம்பொழிற் சிவபெருமானை நெஞ்சே! இடைவிடாமல் சிந்திப்பாயாக. கு-ரை: "அழுக்கு" என்றது, உடம்பை; மலம் நீங்கிய முத்தரது தனுவையும் கரணங்களையும் இறைவன் தன்னுடையனவாகக் கொண்டு அவற்றின்கண் தனது அருளாற்றல் வெளிப்பட நிற்பனாகலின், "என் அழுக்கிற் புகுவான்" என்று அருளினார். "நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற கற்பகமே" (ப.95. பா.4.) எனவும் பின்னர் வரும். "புறம் புறம்", என்னும் அடுக்கு, 'கையைக் கையை நீட்டுகின்றான்' என்றல் போல, இடைவிடாமைப் பொருட்டு. 'புறத்தைப் புறத்தை' என உருபுவிரிக்க; ஏகாரம் தேற்றம். சோதித்தல் - ஆராய்தல்; குற்றங்களைந்து தூய்மை செய்தல். "அந்நாள்" என்றது, தாருகாவனத்து முனிவர் - பத்தினியர்பாற்சென்ற காலத்தை. "என்று" என்றது, 'என்பதை முன்னிட்டுக் கொண்டு' என்றவாறு. 'அகங்களில் (இல்லங்களில்) திரியும்' என்க. "திரியும்" என்றது. இறப்பில் நிகழ்வு.
|